குற்றாலம்: ஊட்டி போன்ற மலைப்பாதை, துள்ளி குதிக்கும் மான்கள் - இந்த அருவிகளை தெரியுமா? Twitter
தமிழ்நாடு

குற்றாலம்: ஊட்டி போன்ற மலைப்பாதை, துள்ளி குதிக்கும் மான்கள் - இந்த அருவிகளை தெரியுமா?

Antony Ajay R

வருடா வருடம் குற்றாலம் சென்று பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி என 5 அருவிகளையும் சுற்றிவிட்டு வருபவரா நீங்கள். உங்களுக்கானது தான் இந்த செய்தி.

குற்றாலம் என்பது வெறும் அருவிகள் மட்டுமில்லை. அங்கு சுற்றிப்பார்க்க இன்னும் பல இடங்கள் இருக்கின்றன. செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவிகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை.

வேறு எங்கெல்லாம் நாம் சென்று ஆட்டம் போடலாம் என்பதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்…

குண்டாறு அணை

குற்றாலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க சிறந்த இடமாக இருக்கும். இதன் அருகில் உள்ள மலையில் சென்று அருவிகளில் குளிக்கலாம்.

கூட்டம் குறைவாக இருப்பதனால் நாம் தனியாக என்ஜாய் செய்யலாம். கரடு முரடான மலைப்பாதை வழியாக வாடகை ஜீப்பில் பயணித்து தான் நாம் இந்த அணையை அடைய முடியும்.

அந்த மலைகளில் விலையும் பலா, ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா பழங்களை இங்குள்ள சிறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

அடவிநயினர் அணை

இந்த அணை புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாக இருக்கும். உங்களுக்கு புகைப்படம் எடுக்க பிடிக்கும் என்றால் ஒரு நாளையே கூட இங்கு செலவிடலாம்.

இந்த மலைக்கு மேலே செல்வது மிகவும் சவாலான விஷயம், காட்டு விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும். இதனால் அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

குற்றாலத்தில் இருந்து இந்த இடம் 21 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். கேரள எல்லையில் பயணிப்பதால் பயண அனுபவமே ரம்மியமாக இருக்கும்.

கும்பாவுருட்டி அருவி

ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் நீங்கள் பயணித்திருந்தால் அதே உணர்வைத் தரும் அச்சன் கோவில் வழியாக கேரள எல்லையைத் தாண்டி, கும்பாவுருட்டி செல்லும் பாதை.

இதில் பயணிக்கும் போது மான்கள், மிளாக்கள் ( ஒரு வகை மான்) , அரியவகை பாம்புகள், காட்டு அணில்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கலாம். 

இது கேரள வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதனால் இங்கு அதிக விதிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். வாரநாட்களில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும். குடும்பத்துடன் செல்ல ஏற்ற அருவி.

பொதுப்போக்குவரத்தில் பயணிப்பவர்கள் தென்காசி-அச்சன் கோவில் இடையே செல்லும் அரசுப் பேருந்துகளில் கூட செல்லலாம். குற்றாலத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பாலருவி

இந்த அருவிக்கு நம் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. இதற்கென கேரள வனத்துறையினர் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். பிரதான சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் உள்ளே சென்று நாம் அருவியை அடையலாம். இங்கும் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும்.

இந்த அருவிக்கு வருவதும் குளிப்பதும் வார்த்தையில் விவரிக்க முடியாத சுகம். திருவிதாங்கூர் மன்னர்களே பருவ காலங்களில் ஆசையாக வந்து குளிப்பார்களாம். செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சென்றால் தண்ணீர் பால் போல வெண்மையாக விழுவதைப் பார்க்கலாம். 

செங்கோட்டை - புனலூர் சாலையில் ஆரியங்காவு எனும் ஊரில் இருந்தான் இந்த அருவிக்கு செல்ல வேண்டும். 

தென்மலை அணை, சூழியல் பூங்கா

இந்த அணைக்கு செல்வது ரம்மியமானது மட்டுமல்லாமல் த்ரில்லானதும் கூட. இங்குள்ள தொங்குபாலத்தில் 5 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. பருவமழைக் காலத்தில் இந்த அணை நிரம்பு வழியும் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

 அருகில் அமைந்துள்ள தென்மலை சூழலியல் சுற்றுலா பூங்கா, குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கு ஏற்ற இடம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, நடனமாடும் இசை நீரூற்று, காட்டிற்குள் சைக்கிள் ஓட்டுவது முதல் அணையில் படகு சவாரி செல்வது வரை, இயற்கை விரும்பிகளை குதூகலப்படுத்தும் வகையில் பல அம்சங்கள் இங்கு உள்ளன.

பக்கத்தில் உள்ள மான் பூங்காவுக்கு சென்று சாம்பார் மான்கள், புள்ளி மான்களைப் பார்க்கலாம். கேரள சுற்றுலாத்துறை மூலம் தங்கும் விடுதிகளை புக் செய்தால் செலவும் குறையும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?