CPM veteran and freedom fighter N Sankaraiah passes away at 102 in Chennai Twitter
தமிழ்நாடு

சங்கரய்யா: இறுதி காலம் வரை போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைவு

தனது இறுதிக் காலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியவர். அவரின் தொடர் போராட்டத்தையும் தொண்டையும் கவுரவிக்கும் வகையில் திமுக தலைமையிலான தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்தது.

Priyadharshini R

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவருக்கு ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த என். சங்கரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த விடுதலைப் போராட்ட வீரர்

1921 ஆம் ஆண்டு ஜூலை 15ல் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தார் சங்கரய்யா. தனது 9 வயதில் பகத் சிங் மரணத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின் காரணமாக கல்லூரி படிப்பை முழுமையாக முடிப்பதற்கு முன் 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார்.

சிறையிலிருந்தது வெளியே வந்த சங்கரய்யா, தொடர்ந்து தேசத்திற்காக போராடினார்.கல்லூரி மாணவர்களைத் திரட்டி பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி 4 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

அதேபோல் 1939 மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

'ஜனசக்தி' இதழில் 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார்வப்பூர்வ இதழான தீக்கதிரின் முதல் ஆசிரியர் சங்கரய்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.

1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.

தனது இறுதிக் காலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடியவர். அவரின் தொடர் போராட்டத்தையும் தொண்டையும் கவுரவிக்கும் வகையில் திமுக தலைமையிலான தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்தது.

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு ஆவண செய்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கல்லூரி பருவம் முதல் தனது இறுதிக் காலம் வரை பொதுநலம் கருதி போராடிய சங்கரய்யா இன்று (15.11.2023) மறைந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?