பிறந்த குழந்தை "நான் வெளியே வந்துட்டேன்" எனக் கூறியது உண்மையா? Twitter
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: பிறந்த குழந்தை "நான் வெளியே வந்துட்டேன்" எனக் கூறியது உண்மையா?

Antony Ajay R

பிறந்த குழந்தை ஒன்று அழாமல் "நான் வெளியே வந்துட்டேன்" எனக் கூறியதாக பரவிய தகவல் நேற்று இணையத்தை பதற வைத்தது.

பெரிய செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட, இணையம் முழுவதும் இந்த செய்தி தீயாக பரவியது.

பலரும் அதிசயக் குழந்தைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா? பிறந்த குழந்தை எப்படிப் பேசும்? என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள களியாம்பூண்டி என்ற கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சந்திரன் – ரேவதி என்ற இணையருக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தான் பேசியதாக செய்திகள் வெளியாகின.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என செய்தி வெளியிட்டுள்ளது ஒரு Fact - Check செய்தி நிறுவனம்.

குழந்தை பிறந்த போது இருந்த சத்தம் ஏதாவது அப்படித் தவறாக கேட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் குழந்தைப் பிறக்கும் போது அதற்கு அழ மட்டுமே தெரியும். வார்த்தைகளோ, அவற்றைக் கோர்த்து பேசும் திறமையோ இருக்காது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் குழந்தையின் தாயும் அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் குழந்தை பேசியதாக ஊடகங்களுக்கு கூறியது ஏன் எனத் தெரியவில்லை.

குழந்தையின் தாயுடன் இருந்த உதவியாளர் ஊர்மக்களிடம் குழந்தை பேசியதாக கூறியதும் அங்கு குழந்தையைக் காண பலர் கூடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களும் அந்த பகுதிக்கு விரைய இது பெரிய விஷயமாக வளர்ந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?