வாக்கு எண்ணிக்கை

 

Twitter

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் LIVE : Dravidian Model ஆட்சிக்கு மக்கள் நற்சன்றிதழ்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது

Antony Ajay R

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லை

மூலக்கரை பேரூராட்சியில் 1-வது வார்டு திமுக மற்றும் 2-வது வார்டில் காங்கிரஸ் வெற்றி

களக்காடு நகரட்சி 2-வது வார்டில் சுயேட்சை, மூன்றாவது வார்டில் அதிமுக முன்னிலை

கடலூர் 

கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டு சாவி தொலைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது.

கடலூர்

திருச்சி

துவாக்குடி நகராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

பரமக்குடியில் திமுக முன்னிலை

பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 2 வார்டுகளை வென்று திமுக முன்னிலையில் உள்ளது

பேரூராட்சிகளில் திமுக முன்னிலை

489 பேரூராட்சிகளில் 72-ல் திமுக முன்னிலை, அதிமுக - 7, பாஜக - 2, அமமுக - 1 , மற்றவை - 28

19 நகராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை

138 நகராட்சிகளில் 19-ல் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கின்றது. அதிமுக 1 நகராட்சியில் முன்னிலையிலிருக்கிறது.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நகராட்சியில் மொத்தமுள்ள 35 வார்டுகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

மதுரை

மதுரை மாநகராட்சியில் 5 வார்டுகளை வென்று திமுக முன்னிலை

மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

மாநகராட்சி - 21

நகராட்சி - 138

பேரூராட்சி - 489

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.

மாநகராட்சியில்  திமுக முன்னிலை

சென்னை, வேலூர், ஈரோடு மாநகராட்சிகளில் திமுக ஆரம்பம் முதலே முன்னிலை எடுத்திருக்கிறது. இதுவரை 9 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது

மாநகராட்சி நிலவரம்

சென்னை, வேலூர், ஈரோடு, மதுரை, ஒசூர், கடலூர் உள்பட 14 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் இருக்கிறது. வேறெந்த கட்சியும் எங்கேயும் முன்னிலை வகிக்கவில்லை

183 பேரூராட்சியில் திமுக முன்னிலை

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணைக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 489 பேரூராட்சிகளில் 189-ல் திமுக முன்னிலை, அதிமுக - 28, பாஜக - 4, அமமுக - 3, மற்றவை - 32

குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் வெற்றி

இந்நிலையில் நெல்லை பணகுடி பேரூராட்சியின் 4ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் மனுவேல் மற்றும் அதிமுக வேட்பாளர் உஷா ஆகியோர் தலா 266 வாக்குகள் பெற்று இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் வெற்றி பெறும் வேட்பாளர்களின் சான்றிதழில் இந்த முடிவுகள் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவையில் பெரிய நெகமம் பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக.

கோவை மாநகராட்சியில் 3 வார்டுகளை வென்று திமுக முன்னிலை வகிக்கிறது.

சென்னை

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 1, 8, 29, 121, 174, 187 ஆகிய ஆறு வார்டுகளை கைப்பற்றியது திமுக. 21 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 10 வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

59-வது வார்டில் அதிமுக வேட்பாளர் மகேஷ்வரி டெபாசிட் இழந்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றுள்ளார்.

3வது வார்டில் திமுகவின் ரெங்கசாமி, 6வது வார்டில் திமுக-வின் ஜெயசீலி 7வது வார்டில் நிர்மல் ராஜ், 12-வது தேவேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 10 வார்டில் அதிமுக-வின் பத்மாவதி செண்பக செல்வன் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை திமுக 12, அதிமுக 1 சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேதிமுக வெற்றி

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் 2-வது வார்டில் தேதிமுக வேட்பாளர் வெற்றி

விஜய் மக்கள் இயக்கம் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி நான்காவது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

சென்னையில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி

சென்னை 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் 19 பேரும், அதிமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை 23-வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜன் என்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Rajan

நாம் தமிழர் கட்சி

3 பேரூராட்சி வார்டுகளில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில பேரூராட்சி வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.

திருவையாறு பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. இங்குள்ள 15 வார்களில் 11 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 இடங்களில் 10 இடங்களில் திமுக முன்னிலை

தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் அங்குள்ள ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அமமுகவின் முதல் வெற்றியாக இது உள்ளது

திமுக கைப்பற்றிய நகராட்சிகள்

திருத்துறைப்பூண்டி, அம்பாசமுத்திரம், சத்தியமங்கலம், துவாக்குடி நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ள திமுக

அரசிராமணி, கோதநல்லூர், தியாக துர்கம், சர்கார் சாமக்குளம், வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் , புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, நன்னிலம், தொண்டாமுத்தூர், மணல்மேடு ஆகிய பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது திமுக.

திண்டுக்கல் வத்தலகுண்டில் அனைத்து வார்டுகளையும் கைப்பற்றி பேரூராட்சியை வென்றுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்துக்கு இரண்டாவது வெற்றி

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் பூக்கடை மோகன் 3 வார்டை கைப்பற்றியுள்ளார்.

கோவையில் திமுக!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியை கைப்பற்றியுள்ளது திமுக.

ஒரு ஓட்டு வித்யாசத்தில் பாஜக வெற்றி

சத்தியமங்கலம் நகராட்சியில் 8-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஒரு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி

விருதுநகர் நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது.

விருதுநகரிலுள்ள 36 வார்டுகளில் திமுக - 20, அதிமுக -3, காங்கிரஸ் - 8, மா.கம்யூ - 1, அமமுக - 1, சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

பேரூராட்சியைக் கைப்பற்றிய சுயேட்சைகள்

சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளையும் சுயேச்சை வேட்பாளர்கள் கைப்ற்றினர்.

விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21 வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் வெற்றி பெற்றார். இவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக களமிறங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

முதன் முறையாக திமுக வெற்றி 

கன்னியாக்குமரி பேரூராட்சியை முதன்முறையாகக் கைப்பற்றியது திமுக.

இளம் வேட்பாளர் வெற்றி

மதுரையில் 79வது வார்டு 26 வயது திமுக இளம் வேட்பாளர் லத்திக்காஸ்ரீ வெற்றி

ஒரே ஒரு ஓட்டு

பவானிசாகர் பேரூராட்சி 11-வது வார்டி போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது.

கோவையில் திமுக வெற்றி

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்ப்பாறை, கருமத்தப்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

வாரிசுகள் வெற்றி!

செஞ்சி பேரூராட்சியில் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் வெற்றி.

சென்னை மாநகராட்சி 99-வது வார்டு முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி வெற்றி. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வியடைந்தார்.

திருநங்கை வெற்றி!

வேலூர் மாநகராட்சி 37-வது வார்டு திமுக வேட்பாளரான திருநங்கை கங்கா வெற்றி!

கணவன் - மனைவி வெற்றி

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 19-வது வார்டில் தங்கமணி, 20-வது வார்டில் அவரது மனைவி மனோன்மணி இருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி.

தஞ்சாவூரில் 20 பேரூராட்சிகளில் திமுக 18 கைப்பற்றியது

திருபுவனம் பேரூராட்சி, திருவிடைமருதூர் பேரூராட்சி, வேப்பத்தூர் பேரூராட்சி, சோழபுரம் பேரூராட்சி, சுவாமிமலை பாபநாசம் பேரூராட்சி, திருப்பனந்தாள் பேரூராட்சி, மேலதிருப்பந்துருத்தி, .மெலட்டூர் பேரூராட்சி, அம்மாப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, வல்லம் பேரூராட்சி, மதுக்கூர் பேரூராட்சி, பேராவூரணி பேரூராட்சி, பெருமகளூர் பேரூராட்சி, ஒரத்தநாடு, திருநாகேஷ்வரம், அய்யம்பேட்டை ஆகிய பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது திமுக.

பேரூராட்சி(திமுக - 6, அதிமுக -6), ஆடுதுறை பேரூராட்சி (பாமக) ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது.

அதிமுக-வில் வெற்றி பெற்றவுடன் திமுகவிற்கு தாவிய வேட்பாளர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9-வது வார்டில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட அருண் சுந்தரபிரபு வெற்றிபெற்றதாக சிறிது நேரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க-வில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், தற்போது வெற்றிபெற்றக் கையோடு தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்.

உமா ஆனந்த் வெற்றி

பாஜக-வை சேர்ந்த கோட்சே ஆதரவாளரான இந்துத்துவவாதி உமா ஆனந்த் சென்னை மாநகராட்சி 134-வது தொகுதியில் வென்றுள்ளார்.

மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன் - மு.க.ஸ்டாலின் ட்விட்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?