பிடிஆர் குறித்து ட்விட்டரில் அவதூறு : வீடியோ வெளியிட்ட வெள்ளைக்காரர் - உண்மை என்ன?  News Sense
தமிழ்நாடு

பிடிஆர் குறித்து ட்விட்டரில் அவதூறு : வீடியோ வெளியிட்ட வெள்ளைக்காரர் - உண்மை என்ன?

Antony Ajay R

நிதியமைச்சர் பிடிஆர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையே சில நாட்களாக ட்விட்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.

அவர்களின் தொண்டர்களும் கட்சியினரும் ட்விட்டரிலும் பேஸ்புகிலும் வாக்குவாதத்தில், மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிடிஆர் உடன் பணிபுரிந்தவர் என்ற பெயரில் ஒருவர், "பிடிஆர் ராஜன் மோசமாக பணியாற்றியதனால் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது,

இந்த வீடியோ உண்மையா பொய்யா என விவாதம் எழுந்தது. திமுகவினர் இது பொய்யான கருத்து என்றுக் கூறிவந்தனர்.

இதனை ராமன் @raman_1990_US என்ற ட்விட்டர் பக்கம் தான் பதிவேற்றியிருக்கிறது. இந்த ட்விட்டர் கணக்கு துவங்கி 2,3 நாட்களுக்கு உள்ளாகவே இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் விளக்கம்

PTR பழனிவேல் தியாகராஜன்

இறுதியாக இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் ராஜன். அவர் தனது பதிவில், "மதவாதிகளுக்கு சாதாரண மூளை இருக்க முடியாது" என்று ஒரு பதிவினைப் வெளியிட்டார். அதில், "இந்த பொய்யான கணக்கு வீடில்லாத ஒருவரை தனக்கு எதிராக பேசவைத்திருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.

தனது பெயர், வங்கியின் பெயர், வேலையின் பெயர் ஆகியவை சரி எனக் கூறியுள்ளார்.

"புகாரின் பெயரில் இது நீக்கப்படுவதற்கு முன்பு இந்த முட்டாள்களைப் பாருங்கள்" என எழுதியிருக்கிறார்.

போலிக்கணக்கு

இந்த கணக்கு போலியானது என நிதியமைச்சர் கூறியுள்ளார். இந்த கணக்கு செப்டம்பர் 2022ல் தான் ட்விட்டரில் இணைந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கணக்கின் முதல் ட்விட்டாக அமெரிக்க ஜனாதிபதி பைடனின் ட்வீட் ரீ-ட்விட் செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அவரின் சில ரீ-ட்வீட்டுக்கு பின்னர், வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் ஒரு ட்வீட், தொடர்ந்து இந்த வீடியோ. பிறகு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகிய ட்வீட்டுகள் ரீ-ட்விட் செய்யப்பட்டுள்ளது.

34 ஃபாலோவர்கள் கொண்டுள்ள இந்த கணக்கு இதுவரை ஒரு சொந்த போஸ்ட் கூட பதிவிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?