Travel: சென்னையை சுற்றியுள்ள இந்த இடங்கள் உங்களுக்கு தெரியுமா? Canva
தமிழ்நாடு

Travel: புலிகட் ஏரி டு தலகோனா நீர்வீழ்ச்சி - சென்னையை சுற்றியுள்ள 5 வீக்-எண்ட் ஸ்பாட்ஸ்!

வெளியில் சென்று ஊர் சுற்றிவிட்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள், சென்னை, சென்னையை சுற்றியுள்ள இந்த இடங்களுக்கு சென்று வரலாம்.

Keerthanaa R

வார இறுதி வந்துவிட்டாலே கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு என்று வைப் செய்ய தொடங்கிவிடுவோம். இந்த இரண்டு நாள் லீவை வீட்டிலேயே குப்புற படுத்து கழிக்கும் வர்க்கம் ஒரு பக்கம். அவுட்டிங் போய்ட்டு வரலாம் என்று சொல்லுவது ஒரு வர்க்கம்.

அப்படி வெளியில் சென்று ஊர் சுற்றிவிட்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள், சென்னை, சென்னையை சுற்றியுள்ள இந்த இடங்களுக்கு சென்று வரலாம்.

புலிகட் ஏரி, சென்னை:

கோரமண்டல் கடற்கரையில் அமைந்திருக்கும் புலிகட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சால்ட்வாட்டர் ஏரி ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஏரியில் கிங் ஃபிஷர், ஃப்ளமிங்கோ போன்ற பறவைகளை காணலாம். விடிவதற்கு முன் இங்கு சென்றுவிட்டால், சூரிய உதயத்தை காணலாம். சூரியன் அஸ்தமனத்தையும் காணலாம்

மகாபலிபுரம்:

ஒரு நாள் ட்ரிப் செல்ல சிரந்த இடம் மகாபலிபுரம். பல்லவ அரசர் நரசிம்ம பல்லவரின் மற்றொரு பெயர் மாமல்லன். பல்லவர்கள் ஆட்சியில் மகாபலிபுரம் எழுப்பப்பட்டதால், இந்த இடத்திற்கு மாமல்லபுரம் என்ற பெயரும் இருக்கிறது. மெட்ராஸ் குரோக்கடைல் பேங்க், மகாபலிபுரம் பீச் இங்கு ஃபேமஸ்

நாகலாபுரம்

சென்னையிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் அமைந்திருக்கிறது நாகலாபுரம். இங்கு டிரெக்கிங் செல்லலாம். இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகள், பச்சை ஆடை போர்த்திய மலைப்பகுதிகள் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் உலக வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரு நாள் கடத்தி வேறு உலகத்துக்கு இட்டுச் செல்லும். மன அமைதியை கொடுக்கும்

காஞ்சிபுரம்

தங்க நகரம் என்றழைக்கப்படும் கஞ்சிபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் அமைந்துள்ளன. இவை அதன் நேர்த்தியான கட்டிடக்கலைகளுக்கு பெயர்பெற்றது.

தவிர, Bird Watchingகிற்கு சிறந்த ஸ்பாட் காஞ்சிபுரம் தான்!

டலகோனா நீர்வீழ்ச்சி:

சென்னையிலிருந்து சுமார் 185 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது டலகோனா நீர்வீழ்ச்சி. அடர்ந்த வனப்பகுத்திக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த நாட்டர்ஃபால்ஸில், தண்ணீர் சுமார் 270 அடியிலிருந்து கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் தண்ணீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?