தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணை, இயற்கையின் அழகு மற்றும் மனிதனின் பொறியியல் திறன் ஆகிய இரண்டிற்கும் சான்றாக நிற்கிறது.
1983 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட இந்த அணையின் அற்புதம் திருநெல்வேலி சுற்றுப்புறத்துக்கே சுற்றுலாத்தலமாக உள்ளது. அமைதியான, கண்கவர் காட்சிகளை வழங்கும் குண்டாறு அணை 389 மீட்டர் நீளமும், 36.10 மீட்டர் உயரமும் கொண்டது.
25 மில்லியன் கன அடி தண்ணீரைக் கொண்டு, அண்டை கிராமங்களுக்கு பாசன வசதிகளை வழங்குகிறது.
பருவமழைக் காலத்தில் கூடுதல் அழகு பெறுகிறது குண்டாறு அணை. மழைநீர் நிரம்பி வழியும் காட்சி பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறது. இந்த இயற்கை அதிசயத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
அணையின் நீரில் நீராடலாம், அருகிலிருக்கும் அருவியை பார்வையிடலாம் அல்லது அருகில் ஓடும் நீரோடையின் அமைதியை அனுபவிக்கலாம்.
இங்கு தனித்துவமான காட்சிகளை வழங்க மோட்டார் படகு சேவை உள்ளது. 10 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம்.
குண்டாறு அணையானது அதன் இயற்கை அதிசயங்களுக்கு மேலதிகமாக, பார்வையாளர்கள் ஓய்வெடுக்கவும், இயற்கையின் அழகில் மூழ்கவும் ஒரு பூங்காவைக் கொண்டுள்ளது.
குண்டாறு அணையில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில், சாகச நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது.
குண்டாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரமாண்டத்தின் மத்தியில் ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp