Happy Pongal 2023: உங்கள் ஃபேஸ்புக்கில் பகிர 10 வாழ்த்து செய்திகள்! twitter
தமிழ்நாடு

Happy Pongal 2023: உங்கள் ஃபேஸ்புக்கில் பகிர 10 வாழ்த்து செய்திகள்!

NewsSense Editorial Team

தைத்திருநாள் நெருங்கி வருகிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்த்துசொல்ல இதோ சில ஐடியாக்கள்!

  • தமிழ் மொழியைப் போல சீரும் சிறப்போடும் நீண்ட நாள் வாழ தமிழன்னையை பிரார்த்திக்கிறேன். இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • இனம் புரியாத இன்பம் மனதில் பொங்க

    நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்க

    குடும்பத்தில் குதூகலம் பொங்க

    உரக்கச் சொல்வோம் பொங்கலோ பொங்கல்…

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • இருள் கவிந்த மனதில் அறிவு ஒளிரட்டும்

    ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரியட்டும்

    அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்

  • உழவர் பெருமக்களின் அறுவடைத் திருநாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும், இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  • இந்த பொங்கலில் பொங்கல் பானையோடு…

    அன்பு பொங்கட்டும், இன்பம் பொங்கட்டும், இனிமை பொங்கட்டும்

    அனைவருக்கும் பொங்கள் பெருநாள் வாழ்த்துகள்.

  • அன்பு நிலைபெறட்டும், வாழ்கை வளம் பெறட்டும்

    பண்பு நிலைகொள்ளட்டும், பகைமை விலகட்டும்

    செருக்கு மறையட்டும், செல்வம் நிலைக்கட்டும்

    அன்பு நெஞ்சங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  • நலங்கள் நாடி வரட்டும், வினைகள் ஓடி போகட்டும், நல்ல குணங்கள் கூடி வரட்டும், நாச எண்ணங்கள் வீழ்ந்து மடியட்டும்… இந்த நன்னாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  • தமிழ் வாழ, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ

    நம் மக்கள் தமிழ்நாடு எனும் நிலபரப்பைச் சூழ

    உரக்கச் சொல்வோம் பொங்கலோ பொங்கல். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  • ஜல்லிக்கட்டு நம் இனத்தின் வீர அடையாளம்.

    அதற்கு நம் சமுகம் சிந்திய ரத்தங்களையும்,

    எதிர்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளையும் மறந்துவிடாதே தமிழா.

    தமிழும், தமிழர்களும் வாழ இந்த விழுமியங்களை விட்டுவிடாதே…

    அன்புடன் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  • தமிழ் சமூகத்தையும், தமிழ் மொழியையும், தமிழ் குடிகளையும் உள்ளன்போடு நேசிக்கும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளான தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?