குஷ்பு : நான் பள்ளிக் காலங்களில் ஹிஜாப் அணிந்தது இல்லை

 

NewsSense

தமிழ்நாடு

குஷ்பு : நான் பள்ளிக் காலங்களில் ஹிஜாப் அணிந்தது இல்லை

"என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட இல்லை. யாரும் குறை கூறவில்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்?பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?"

NewsSense Editorial Team

கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல என பா.ஜ.க வை சேர்ந்த நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹிஜாப் அணியவில்லை

தான் பள்ளிக்கூடம் சென்ற போது ஹிஜாப் அணியவில்லை, அணிந்து வந்த மாணவிகளையும் பார்த்ததில்லை எனவும் அவர் அந்த ட்விட்டில் தெரிவித்துள்ளார்.


“கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் பற்றியது. பள்ளியில் சீருடை அணிந்ததற்காக நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காக. ஹிஜாப் விவகாரத்தில் அரசியலில் செய்வது அவமானம்." என பதிவிட்டுள்ளார்.

ஒன்றாக இருப்போம்

"நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட இல்லை. யாரும் குறை கூறவில்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்?பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?" என தெரிவித்துள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?