ராகுல் காந்திக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திண்டுக்கல்லில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் பாத யாத்திரையைத் தொடங்கும் ராகுல் காந்தி,காஷ்மீர் வரை செல்ல உள்ளார்.இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையைத் தொடங்கவுள்ளார்.
கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வைத் அளிக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் யாத்திரை தொடங்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனரான அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார்.
”கோ பேக் ராகுல்” என்ற முழக்கத்தோடு இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதற்காகக் கன்னியாகுமரிக்கு அர்ஜுன் சம்பத் ரயிலில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு அர்ஜுன் சம்பத் சென்றுள்ளார்.
தகவலில் அடிப்படையில் அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust