கடலை மிட்டாய் Twitter
தமிழ்நாடு

கோவில்பட்டி கடலை மிட்டாயை இனி ஸ்பீட் போஸ்ட்டில் வாங்கலாம் - எப்படி?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாயை ஸ்பீட் போஸ்ட்டில் பணம் செலுத்தி வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Priyadharshini R

தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் தனிச் சிறப்பு.

தாமிரபரணி தண்ணீர், மண்டை வெல்லம், கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலை, மண்ணின் ஈரப்பதம் இவைதான் கோவில்பட்டி கடலை மிட்டாயின் சுவை!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

கடலை மிட்டாய்

கடலை மிட்டாயின் பெருமையை உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டுமென்று கடந்த அக்டோபர் மாதம் இந்திய அஞ்சல் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல் துறை மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விற்பனையையும் அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 கொடுத்து கடலை மிட்டாய்க்கான ஆர்டர் செய்தால் அது கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்டு அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கே ஸ்பீட் போஸ்ட்டில் கொண்டு சேர்க்கப்படும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Indian post

விரைவு அஞ்சலுக்கென தனி கட்டணம் கிடையாது என்றும் ரூ.390 செலுத்தி விரைவு தபால் மூலம் பெறப்படும் பார்சலில் மொத்தம் கால் கிலோ எடை கொண்ட 4 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?