அன்பின் இடத்தை எதைக் கொண்டும் நிரப்பிவிட முடியாது என்பதே நிதர்சனம். ஆனால், நம் மீது அன்பு கொண்டவர்களுக்கு, நம்மை அன்பை வெளிப்படுத்த சில ஆச்சரிய தருணங்கள் துணை செய்யும்.
நம்மை மகிழ்ச்சிப்படுத்த இப்படியான முயற்சியைச் செய்திருக்கிறாரா இவர் என்கிற நம் அன்புக்குரியவர்களின் எண்ணம் அவர்களுக்கு பெரும் ஆனந்தத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு ஆச்சரிய தருணத்தை தன் மனைவிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ஒருவர்.
தங்கள் திருமண நாளுக்காக மனைவிக்கு அவர் கொடுத்த சர்ப்ரைசில் மனைவி ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருக்கிறார். 3 வருடங்களாக மனைவிக்குத் தெரியாமல் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் கென்.
இன்று தனது திருமண நாளன்று அந்த வீட்டுக்குத் தன் மனைவியை சர்ப்ரைசாக அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த வீட்டை தன் மனைவிக்கான திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
அந்த வீட்டுக்குத் தன் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்திய வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் கென்.
அந்த வீட்டில் தன் மனைவி, குழந்தைகள் புகைப்படங்களைச் சுவர்களில் மாட்டியிருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த பதிவில்,2010 -ல் சென்னை பாரிஸ்கார்னர் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் செய்தபோது எனது மனைவிக்கு மாத்து உடை வாங்க கூட காசு இல்லை என்றார்.
பசி என்று என் மனைவி கேட்டபோது,4மணிக்கு மேல் நான் வாங்கி வந்த தயிர் சாதம் கெட்டு போயிவிட்டது, கல்யாண போட்டோ கூட இல்ல, கனவுகளை துரத்திக் கொண்டே இருப்போம். என்றாவது ஒரு நாள் நல்லது பிறக்கும், தன்னம்பிக்கையை நல்லெண்ணத்தை விதைக்கிற நண்பர்கள் கூட இருப்போம். கொண்டாடுவோம். மகிழ்ந்திருப்போம்." என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust