புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா அரசு, ஆளுநர் தமிழிசை பழங்குடி திருவிழாவுக்கு செல்ல ஹெலிகாப்டர் கேட்ட கோப்புக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இது குறித்து முரசொலிப் பத்திரிகை எழுதிய கட்டுரையில் "மாநில அரசோடு இணைந்து செயல்பட்டால் இன்று ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதை , அரசியல் சட்டம் தங்களது அதிகாரத்துக்குத் தந்துள்ள வரம்பை மீறிச் செயல்பட நினைத்திடும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்து ஆளுநர்களுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முரசொலி பத்திரிகையைச் சாடினார்.
இந்த நிலையில் ஆளுநர் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ்ஜின் நேர்காணல் இதோ!
தமிழிசையை நாம் ஆளுநராக தான் பார்க்க வேண்டும். தமிழச்சியாக பார்க்க முடியாது.
தமிழிசையை ஆளுநராக உட்கார வைக்கும் போதே அவர் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்... தமிழிசை அரசியலில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அது ஆர்எஸ்எஸ்-க்கு பிடிக்கவில்லை. அரசியலில் இருந்து அவரை வெளியேற்ற வழிபார்த்தனர். தமிழிசைக்கு இருக்கும் சமூக பின்னணியைக் காரணமாக அவரை ஒரேடியாக வெளியேற்றாமல் ஆளுநர் பதவி கொடுத்தனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பில் இணையும் போதே அவர் இந்த அவமானங்களைச் சந்திக்க தயாராக இருந்திருக்க வேண்டும்.
ஆளுநர் நிர்வாகத்தின் தலைவராக இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. அவர் அரசியல்வாதியாக இருப்பதனால் பிரச்னை வருகிறது.
தமிழக ஆளுநரும் அரசுக்குத் தொடர்ந்து தொந்தரவுகளைக் கொடுத்து வருகிறார். அவருக்கான இருப்பிடம், மின்சாரம், சம்பளம் என அனைத்தையும் மாநில அரசுக் கொடுக்கிறது என்றாலும் அதனால் நமக்கு தொந்தரவுகளைத் தவிர வேறெந்த பயனும் இல்லை.
தெலுங்கானா விழித்துக்கொண்டார்கள் என்பது தான் தெரிகிறது. மாநில அரசு நினைத்தால் ஆளுநர்கள் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்பதை இதுக் காட்டுகிறது.
தமிழிசையாக இருந்தாலும் அவரை நாம் ஆளுநராகதான் பார்க்க வேண்டும். தமிழச்சியாக பார்க்க முடியாது. ஆளுநருக்கு உரிய மரியாதையை தெலுங்கானா அரசு கொடுத்திருக்கிறது.
அது தான் சரியான ஒன்று. நம்ம ஊரு ஆளுநருக்கும் இது புரிய வேண்டும்.
ஆளுநரின் தேநீர் விருந்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு கோப்புகளை அனுப்பவில்லை என்பதனால் திமுக புறக்கணித்த போது அண்ணாமலை "ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்" என்று உளரினார். அப்போது தேநீர் செலவு பில் குறித்து பிடிஆர் கேட்டார். இதுவரை அந்த பில் க்ளியர் செய்யப்படவில்லை.
ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு கோப்புகளை அனுப்பாதது அவர் எந்த வேலையும் செய்யவில்லை என்றே எடுத்துக்கொள்ளப்படும். எந்த வேலையும் செய்யாதவருக்கு எதற்காக சம்பளம்? எதற்காக வீடு? வேலைக்காரர்கள் எதற்கு? மாநில அரசு இவையெல்லாவற்றையும் நிறுத்த முடியும். ஆளுநர் ரவிக்கு தெரிய வேண்டும். மோடி, அமித்ஷாவுக்கு தெரிய வேண்டும்.
அவர் இங்கு வந்தது முதல் எந்த வேலையும் செய்யவில்லை. நன்றாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். ஊட்டியில் அவர் மகளுக்கு கல்யாணம் கூட மாநில அரசின் தயவிலேயே நடந்தது.
பொது மக்களுக்கே இது புரிந்திருக்கும் போது அமித்ஷாவுக்கு புரியாதா? பாஜகவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாடே மாறி வருகிறது. இந்த எதிர்ப்பு போல தான் சிறிதாக ஆரம்பித்தது பிரஞ்சுப் புரட்சியும்!
இப்போது நடக்கும் விஷயங்கள் ஆளுநருக்கு எதிரானவை அல்ல. மத்திர அரசுக்கு எதிரானவை. குறிப்பாக தெலுங்கானா தனி நாடு போலவே உருவாகி வருகிறது. ஆளுநர் இல்லாமல் சட்டமன்றம் கூட்ட முடியும் என்ற நிலை வந்த போதே டெல்லியின் சக்தி ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
தெலுங்கான அரசாவது ஆளுநருக்கு ஆட்டம் காட்டியது. முதல்வர் ஸ்டாலின் மோடி மேடையில் இருக்கும் போதே நாங்கள் கொடுத்த பணத்துக்கு என்ன பதில் என்று கேட்டார். இதெல்லாம் பொறிகள் ஒரு நாள் காட்டுத்தீயாக பற்றும்.
அனைத்து கேள்விகளும் கொண்ட முழு நேர்கானலையும் காண :
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust