ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. இந்த விளையாட்டை சிலர் மிருகவதை என்று கூறுகிறார்கள். உண்மையில் இந்த விளையாட்டில் உயிரிழந்த மனிதர்கள் தான் அதிகம்.
Jallikattu
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகிறது
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது.
கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றளவும் ஏறுதழுவுதல் (சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.
சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளையை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
ஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது.
Jallikattu
சங்க இலக்கிய காலத்திலிருந்து தொன்று தொட்டு நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சோதனை வந்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தைக் காக்க இளைஞர்கள் ஒன்று கூடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அரசு வேறு வழியில்லாமல் மக்களின் குரலுக்கு இசைந்தது. ஜல்லிக்கட்டு வரலாற்றில் இந்த நிகழ்வும் முக்கிய இடம் பிடித்தது. அப்படிப்பட்ட நம் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடக்கவிருக்கிறது.
Jallikattu
ஜனவரி 14 வெள்ளிக்கிழமை அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
ஜனவரி 15 சனிக்கிழமை அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
ஜனவரி 17 திங்கள் கிழமை அன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்த தினங்களில் காலை 7மணியளவில் தொடங்கி மாலை வரை போட்டிகள் நடைபெறும்.
இந்த மூன்று தினங்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நமது நியூஸ் சென்ஸ் சேனல் சிறப்பு நேரலை செய்யவுள்ளது.