Kanchipuram: பட்டின் தலைநகர் காஞ்சிபுரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் twitter
தமிழ்நாடு

Kanchipuram: பட்டின் தலைநகர் காஞ்சிபுரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Keerthanaa R

தமிழ்நாட்டின் பிரபலாமான கோவில் நகரங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் தான். இந்த நகரம் பல்லவ ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது.

காஞ்சி என்றும் பரவலாக அறியப்படும் இந்த நகரம், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் இந்துக்களின் முக்கிய புனித தலம். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் இந்த நகருக்கு வருகை தருகின்றனர்.

பட்டின் தலைநகரமான இந்த காஞ்சிபுரத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

ஆயிரம் கோவில்களின் நகரம்

காஞ்சிபுரத்தில் கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் இந்த நகரம் ஆயிரம் கோவில்களின் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது

காஞ்சிபுரத்து கோவில் என்றால் கைலாசநாதர் கோவில் தான் அடையாளமே. 7வது நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்டது.

இதை தவிர ஏகாம்பரேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், குமரக்கோட்டன் கோவில், புத்த கோவில்கள் உள்ளிட்ட முக்கிய தலங்களும் உள்ளன.

பட்டின் தலைநகரம்

கைத்தறி பட்டு புடவைகள் காஞ்சிபுரத்தில் நெய்யப்படுகின்றன. பட்டு நெசவு தொழில் காஞ்சிபுரத்தின் பிரதான தொழில்முறையாகும்.

இந்தப் புடவைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பெண்களால் திருமண மற்றும் விசேஷ புடவைகளாக அணியப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் காஞ்சிபுரம் பட்டு புடவைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்தது.

பெரிய காஞ்சி & சிறிய காஞ்சி

காஞ்சிபுரம் நகரம் இரண்டு பாகங்களாக பிரிதுள்ளது. பெரிய காஞ்சி மற்றும் சிறிய காஞ்சி என.

பெரிய காஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம் இருப்பதால், இதனை சிவ காஞ்சி எனவும் அழைக்கின்றனர்.

சிறிய காஞ்சியை விஷ்ணு காஞ்சி என்று அழைக்கின்றனர். இங்கு பெருமாள் கோவில்கள் இடம்பெற்றுள்ளன

புத்த மதம்

தென்னிந்தியாவில் புத்த மதம் பரவ காஞ்சிபுரம் ஒரு முக்கிய மையமாக அமைந்தது. பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் புத்தமதம் பரவத் தொடங்கியது. சைவ, வைணவ பிரிவினர்களுக்கு இடையே ஒரு புறம் மோதல்கள் இருந்தாலும், பௌத்த மதம் தலைதூக்க தொடங்கியது பல்லவ ஆட்சியில் தான்.

சீன பயணியான யுவான் சுவாங்கின் பயண வரலாற்றில், காஞ்சிபுரம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது

காஞ்சிபுரம் இட்லி

தமிழ்நாட்டின் பிரதான காலை உணவு இட்லி. அதிலும் காஞ்சிபுரம் இட்லி இன்னும் ஸ்பெஷல். இதில் இஞ்சி, மிளகு, சீரகம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?