Kanyakumari: ஒளிரும் காளான்கள் கண்டுபிடிப்பு - இரண்டாம் உலகப்போரில் இவை பயன்பட்டது எப்படி? Twitter
தமிழ்நாடு

Kanyakumari: ஒளிரும் காளான்கள் கண்டுபிடிப்பு - இரண்டாம் உலகப்போரில் இவை பயன்பட்டது எப்படி?

முற்றிலும் மனித நடமாட்டம் இல்லாத காடுகளில், 4,5 நாட்கள் அடமழைக்குப் பிறகு இந்த காளான்களைக் காணமுடியும். கன்னியாகுமரியில் இந்தவகைக் காளான்கள் கண்டறியப்படுவது இதுவே முதன்முறை.

Antony Ajay R

இயற்கையாக ஒளிரும் தன்மையுள்ள வெகு சில உயிர்களையே பூமியில் நாம் காண முடியும். மின்மினிப் பூச்சிகள், ஒளிரும் புழுக்கள். சில நேரங்களில் கடற்கரைகள் நீல நிறத்தில் ஒளிரும் அதிசயத்தைக் காண முடியும். ஆழ்கடலில் ஒளிரக் கூடிய சில வகை மீன்கள் இருக்கின்றன.

காடுகளில் சில வகை ஒளிரும் காளான்கள் இருக்கின்றன. பொதுவாக கேரளா, கோவா, மகராஷ்டிராவில் ஒளிரும் பூஞ்சைகளைக் காணமுடியும். இந்த வகை பூஞ்சைகள் முதன்முறையாக தமிழகத்தில் கன்னியாகுமரி வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

‘கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை’ (Kanniyakumari Nature Foundation) மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய ஆய்வில் இவற்றைக் கண்டறிந்துள்ளனர். 3 மாதங்கள் தேடுதல் நடத்தி குலசேரகம் வனசரக பகுதியில் ஒளிரும் காளான்களைக் கண்டறிந்துள்ளனர்.

மூங்கில் காடுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் தான் இத்தகைய காளான்களைக் காண முடியும். சிதைந்த மரங்களில் இவை வளரும். இந்த ஒளிரும் காளான்கள் உயிரொளிர் பூஞ்சை மைசீனியா குளோரோஃபோஸ் (Mycena chlorophos) என்ற வகையைச் சேர்ந்தவை.

இந்த காளான்கள் பகலில் சாதாரண காளானைப் போலவே காட்சியளிக்கும். இருட்டான பிறகுதான் இவற்றைக் காணமுடியும். இந்த காடுகளில் வாழும் காணி பழங்குடியினர் இந்த வகைப் பூஞ்சைகளை முன்பு அதிகமாக பார்த்ததாகவும் சமீபத்தில் இவை மிகவும் குறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்தவகை ஒளிரும் காளான்களில் 120 வகைகள் இருக்கின்றன இவற்றுக்கு உயிரொளிர் பூஞ்சை (Bioluminescent Fungi) என்றுபெயர்.

மின்மினி பூச்சியின் (fireflies/glow worm) வாலில் இருப்பது போன்று இந்த வகை காளான்களில் Luciferin என்ற ஒரு வித வேதிப்பொருள் இருக்கிறது. இதுவே இந்த பூஞ்சைகள் ஒளிர பயன்படுகிறது. ஒளிர்வதன் மூலம் இந்த பூஞ்சைகள் பூச்சிகளை ஈர்த்து தனது விதைகளைப் பரவச் செய்கின்றன.

இந்த காளான்களைப் பயன்படுத்தி இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கடிதங்கள் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காளான்களை நாம் உணவாக பயன்படுத்த முடியாது. ஆனால் தொழில்துறைகளில் பயன்படுத்தலாம்.

இவற்றை நேரில் பார்ப்பது மிகமிக அரிது. முற்றிலும் மனித நடமாட்டம் இல்லாத காடுகளில், 4,5 நாட்கள் அடமழைக்குப் பிறகு இந்த காளான்களைக் காணமுடியும். இந்த காளான்கள் குறித்தும் கன்னியாகுமரி வனப்பகுதி குறித்தும் விரிவான ஆய்வுகள் தேவை என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?