கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஆதித்யாராம் பேலஸில் நடைப்பெற்றது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரி ‘மறக்குமா நெஞ்சம்’. முன்னதாக ஆகஸ்ட் 12ஆம் தேதி இதே இடத்தில் நடைபெறுவதாக இருந்தது. மழையின் காரணமாக செப்டம்பர் 10க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கான்சர்ட்டை ACTC ஈவண்ட்ஸ் என்ற நிக்ழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்து நடத்தினர்.
இந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு பேர் எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நிகழ்ச்சி நடைப்பெற்ற இடத்திற்கு செல்வதில் தொடங்கி, உள்ளே சென்று அமரும் வரை பல இன்னல்களை பொதுமக்கள் சந்தித்துள்ளனர்.
பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகள் தொலைந்து போனது வரை, இரண்டு நாட்களாக இந்த கான்சர்ட்டுக்கு சென்று வந்தவர்கர்கள் பட்டியலிட்ட பிரச்சினைகள் ஏராளம்.
சமூக வலைத்தளங்களில் பலரும், ஏ ஆர் ரஹ்மானையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை, காவல் துறையினரை குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நேர்ந்த சங்கடங்களுக்கு மன்னிப்பு கோரி, தானே மொத்த பொறுப்பையும் ஏற்பதாக தனது X தளத்தில் நேற்று பதிவிட்டார். மேலும், டிக்கெட் வாங்கிய பின் நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போனவர்களுக்கு என்ன தொகையானாலும், திருப்பி நானே கொடுத்துவிடுகிறேன் என்றும் கூறியிருந்தார்
“என்னை பலரும் G.O.A.T (God Of All Trades) என்று புகழ்கின்றனர். இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்திற்கு நானே பலிகடா ஆகிறேன்” என்று பதிவிட்டவர், சென்னையில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற, எந்த தங்கு தடையின்றி மக்கள் கலையை மனதார அனுபவிக்க, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உணர ஒரு கலைப் புரட்சியை ஒன்றிணைந்து நாம் செய்யலாம் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
"இரத்தக்கண்ணீர் எம்ஆர் ராதா சொல்வாரே, கலை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளிப் பருகவேண்டிய அமிர்தமடா, அது. இந்த அனுபவத்தை நான் முற்றிலுமாக நேற்று உணர்ந்தேன்."
ரஹ்மானுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி இன்னும் பலர் ஆதரவு குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கவிஞரும், இயக்குநருமான குட்டி ரேவதி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர், ரஹ்மானை குற்றம் சொல்லுவதில் எந்த பயணும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் மன்னிப்பு கோரியதை மேற்கோள் காட்டியிருந்த குட்டி ரேவதி,
“மன்னிப்பைக் கோரும்போதும் அந்தச் சமூகத்தின் நாகரிகம் அடுத்தக் கட்ட பரிணாமம் கொள்கிறது. இதோ, ஏஆர் ரஹ்மான் தன்னுடைய “மறக்குமா நெஞ்சம்”, நேரடி மேடை நிகழ்வின் போதான மனக்குறைகளுக்கு அவரே பொறுப்பேற்கிறார்” என்று கூறியிருந்தார்.
மேலும், ஒருவரை குற்றம் சொல்லும் முன், நாம் சரியானவராக இருக்கிறோமா என்பதை நினைவுக்கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் குட்டிரேவதி கான்சர்டில் கலந்துகொண்ட தனது அனுபவத்தையும் எழுதி, கலைஞர்களைப் பாராட்டியிருந்தார். இறுதியாக, "இரத்தக்கண்ணீர் எம்ஆர் ராதா சொல்வாரே, கலை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளிப் பருகவேண்டிய அமிர்தமடா, அது. இந்த அனுபவத்தை நான் முற்றிலுமாக நேற்று உணர்ந்தேன்." என அவரது பதிவை முடித்திருக்கிறார்.
மறக்குமா நெஞ்சம் கான்சர்ட்டுக்கு பிறகு, இசையமைப்பாளருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp