vairamuthu  twitter
தமிழ்நாடு

"புலியை தொட்டாலும் தொடுக..." இந்தி திணிப்புக்கு எதிராக கவிஞர் வைரமுத்து ட்வீட்

"புலியை தொட்டாலும் தொடுக, மொழியை தொடாது விடுக" என பதிவிட்டுள்ளார் வைரமுத்து. இந்தி திணிப்பை எதிர்த்து, டிவிட்டரில் #HindiImposition என்ற ஹாஷ்டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

Keerthanaa R

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழங்கள், எல்லா மாநிலங்களிலுமே இந்தியை பொதுமொழியாக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள பரிந்துரையால் சர்ச்சை எழுந்துள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தி திணிப்பை எதிர்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கேந்த்ரிய வித்யாலயாக்களில் பயிற்று மொழியை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு அலுவல் மொழி தொடர்பான அறிக்கை ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் கொடுத்துள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் இந்தியை பொதுமொழியாக்கவேண்டும் என்ற பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக இந்தி மொழியை பயிற்றுவிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்ற எதிர்மறை கருத்துகளை பெற்றுவருகிறது. நாடுமுழுவதிலிருந்தும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நம்மை ஆண்ட மற்ற மொழிக்காரர்கள் யாரும் ( ஆங்கிலேயர்கள் இஸ்லாமிய மன்னர்கள், மராட்டி, தெலுங்கர்கள்) தங்களது மொழியை திணிக்கவே இல்லை. இந்நிலையில், தமிழ்நாட்டை தமிழை ஆளும்போதே இந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"புலியை தொட்டாலும் தொடுக, மொழியை தொடாது விடுக" என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

இந்தி திணிப்பை எதிர்த்து, டிவிட்டரில் #HindiImposition என்ற ஹாஷ்டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?