Indian Railways: இனி மதுரை ரயில் நிலையத்தில் Wedding Photoshoot எடுக்கலாம் - கட்டணம் என்ன? canva
தமிழ்நாடு

Indian Railways: இனி மதுரை ரயில் நிலையத்தில் Wedding Photoshoot எடுக்கலாம் - கட்டணம் என்ன?

பிரப்போஸ் செய்த நாள் முதல், நிச்சயதார்த்தம், திருமணத்துக்கு முன், திருமணத்திற்கு பிறகு, மகப்பேறு, குழந்தை பிறப்பு என வெரைட்டியாக ஃபோட்டோஷூட் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

Keerthanaa R

இனி மதுரை ரயில் நிலையங்களில் திருமண ஃபோட்டோஷூட் நடத்தலாம் என பலே அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன

நம் வாழ்வின் முக்கியமான தருணங்களை புகைப்படங்களாக்கி சேகரித்து வைக்கும் கலாச்சாரம் இன்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணங்கள்.

பிரப்போஸ் செய்த நாள் முதல், நிச்சயதார்த்தம், திருமணத்துக்கு முன், திருமணத்திற்கு பிறகு, மகப்பேறு, குழந்தை பிறப்பு என வெரைட்டியாக ஃபோட்டோஷூட் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

இதற்காக நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

தம்பதிகள் நடந்து வரும்போது காட்டுக்கு தீவைத்தது, ஓடும் ரயிலில் விளிம்பில் நின்று ஃபோட்டோஷூட் செய்வது, ஸ்கை டைவிங் செய்து புகைப்படங்கள் எடுப்பது என அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை.

இது இணையத்தில் வைரலாக வேண்டும் என்ற பப்ளிசிட்டி ஸ்டண்ட்டாகவும் ஒரு வகையில் பார்க்கலாம்.

இந்த வெட்டிங் ஃபோட்டொகிராஃபிக்காக டெஸ்டினேஷன்களையும் தேடித் தேடி பிடிக்கிறோம். அந்த வகையில், இனி ரயில் நிலையங்களில் வெட்டிங் ஃபோட்டோஷூட் நடத்திக்கொள்ளலாம் என அற்புதமான அறிவிப்பை விடுத்துள்ளது மதுரை ரயில் நிலையம்.

தம்பதிகள், அல்லது விளம்பரதாரர்கள் ஃபோட்டொகிராஃபி செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ரயில்வே துறையின் வருவாயை பெருக்கும் முயற்சிகளில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுரை ரயில்வே நிர்வாகம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”மதுரை ரயில் நிலையத்தில் இனி புதுமணத் தம்பதியர் ரூ.5000 கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். ரயில் பெட்டியின் பின்புறம் புகைப்படம் எடுக்க கூடுதலாக ரூ.1,500 கட்டணம் செலுத்தவேண்டும். மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணமாக ரூ.3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிலயங்களை பொறுத்தவரை, சிட்டிகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன - X, Y, Z. இதற்கேற்றவாறு அனுமதி கட்டணம் மாறும், மதுரை Y சிட்டிக்குள் வரும் . திருமண ஃபோட்டொஷூட் தவிர, கல்வி சம்பந்தமான ஃபோட்டோஷூட்டிற்கு ரூ.2,500 மற்றும் தனிநபர் பயன்பாட்டிற்கான ஃபோட்டோஷூட் என்றால், ரூ.3,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?