Viral poster Twitter
தமிழ்நாடு

4 வருடங்களாக தேடிய வரன் : "மணமகள் தேவை" போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞர் - வைரல் புகைப்படம்

4 வருடங்களாக அவருக்குப் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பெண் ஏதும் அமையவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரை புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மணமகள் தேவை என தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார் ஜெகன்.

Priyadharshini R

மதுரையைச் சேர்ந்த இளைஞர் திருமணத்திற்கு வரன் தேட மேட்ரிமோனி உள்ளிட்ட வசதிகள் இருப்பினும், மணமகள் வேண்டுமென போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்

மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஜெகன். 27 வயதான இவர் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Marriage (Rep)

கடந்த 4 வருடங்களாக அவருக்குப் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் ஜெகனுக்கு பெண் ஏதும் அமையவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மதுரை புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 'மணமகள் தேவை' என தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார் ஜெகன்.

Marriage (rep)

இந்த யோசனை அவருக்கு வரக் காரணம் ஜெகன் பகுதி நேர பணியாக ஒரு நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை எனத் தெருக்களில் போஸ்டர் அடித்து ஒட்டும் அளவிற்கு இன்றைய இளைஞர்கள் துணிந்துவிட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?