செந்தில் பாலாஜி: காதுகளுக்கு அருகே காயம்; ICUவில் சிகிச்சை - என்ன நடந்தது?  Twitter
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி: காதுகளுக்கு அருகே காயம்; ICUவில் சிகிச்சை - என்ன நடந்தது?

செந்தில் பாலாஜி கைது குறித்து அவரது உறவினர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை. எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவில்லை, ஜனநாயகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சட்ட விதிகள் முறையாக பின்பற்றபடவில்லை. இது முற்றிலும் மனித உரிமை மீறல். இவ்வாறு அவர் கூறினார்.

Priyadharshini R

தமிழக மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் இதற்கு முன்பு அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதில் நடந்த முறைகேடு தொடர்பாக செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது சகோதரர் அசோக்குமார் வீடு ஆகியவற்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 8:30 தொடங்கி நள்ளிரவு 1:30 மணி வரை சோதனை நடத்தினர்.

அதன்பின் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சேகர்பாபு, உதயநிதி, தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன், சாமிநாதன், கணேசன், சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து நலம் விசாரித்து உள்ளனர்.

விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி கூறியதாவது, "ஒன்றிய அரசின் இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது, செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்."

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது, "செந்தில் பாலாஜி கைது குறித்து அவரது உறவினர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை. எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவில்லை, ஜனநாயகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சட்ட விதிகள் முறையாக பின்பற்றபடவில்லை. இது முற்றிலும் மனித உரிமை மீறல்" இவ்வாறு அவர் கூறினார்.

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "நான் பலமுறை பெயர் சொல்லி அழைத்தும் செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார். கண்களை திறக்கவில்லை. அவரது காதுகளுக்கு அருகே காயம் உள்ளது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளார். மயங்கிய நிலையில் இருப்பதாகவும் ஈ.சி.ஜி. சோதனையில் வேறுபாடுகள் தெரிகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்" என்றார்.

தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?