குரங்கு நீர்வீழ்ச்சி: இதை Monkey Falls என்றழைப்பது ஏன்? கோவையில் ஒரு சூப்பர் ஸ்பாட்! Twitter
தமிழ்நாடு

குரங்கு நீர்வீழ்ச்சி: இதை Monkey Falls என்றழைப்பது ஏன்? கோவையில் ஒரு சூப்பர் ஸ்பாட்!

Keerthanaa R

என்ன தான் தேசாதி தேசங்கள் அலைந்து திரிந்தாலும், இயற்கை நம் மனதிற்கு தரும் அமைதிக்கு இணையில்லை.

மலைகளும், நீரூற்றுகளும், பச்சை வண்ண நிலபரப்புகளும், அடர்வனங்களும் நம்மை உள்ளிருந்து புத்துயிர் பெற வைக்கிறது. ஆனைமலை மலைத்தொடரில், பொள்ளாச்சி - வால்பாறை செல்லும் வழியில் அமைந்திருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சியும் அப்படிப்பட்ட ஓரிடம் தான்.

முன்பு கவியருவி என்று அழைக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி, சமீபத்தில் தான் குரங்கு அருவி என்ற பெயரை பெற்றது. இதற்கு முக்கிய காரணம், இந்த அருவிக்கு சென்றால் எண்ணிலடங்கா குரங்குகளை நாம் காணலாம். மனிதர்களோடு இவையும் அருவி நீரில் குத்தாட்டம் போடும்.

கவியருவி என்ற பெயரும் குரங்குகளை குறிக்கும் சொல் தான். அகனாநூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் குரங்குகளை கவி என்றே அழைத்தனர். சமஸ்கிருத மொழியிலும், குரங்கு 'கபி' என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 18 அடி உயரத்திலிருந்து கீழே பாயும் தண்ணீர் அதன் பளிங்கு நிறத்தினால் பார்ப்பவர் கண்களை கூசச் செய்கிறது.

இயற்கையின் வனப்பும், அமைதியும் ஒருங்கே இருக்கும் இந்த அருவியில், இதமான குளியல் போட்டுக்கொண்டே ஓய்வெடுக்கலாம். மலையேற்றம் செய்யும் நபராக நீங்கள் இருந்தால், குரங்கு நீர்வீழ்ச்சியை அடையும் வழி உங்களை இன்னமும் உற்சாகப்படுத்தும்.

ஆனால், வழிநெடுக பாறைகள் தண்ணீர் பாய்ச்சலால் சற்றே வழுக்கலாக தான் இருக்கிறது. இதனால் நாம் ஸ்லிப் ஆகி கீழே விழக் கூடும்.

கவனமாக மலையேறுவது அவசியம்.

குரங்கு நீர்வீழ்ச்சியின் பெயரே குரங்குகளால் வந்தது தானே? இங்குள்ள குரங்குகளை ஈர்க்கும் வண்ணம் இங்கு ஆங்காங்கே குரங்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாது குரங்குகளையும் ஈர்க்கின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், குரங்குகள் ஒன்றுகூடி மயில் தோகைவிரித்து அழகிய நடனமாடுவதை கண்டு ரசிக்கும் வண்ணம் சில வடிவமைக்கப்பட்டுள்ளது

கோவை, பொள்ளாச்சி வாசிகளுக்கு இந்த குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சாலை வழியாக செல்வது எளிது. மற்ற ஊர்க்காரர்கள் விமானம் அல்லது ரயில் மூலமாக கோவை வந்தடைந்து, அங்கிருந்து பேருந்து மூலமாக செல்லலாம்.

அக்டோபர் முதல் மார்ச் வரை குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்வது சிறந்த நேரமாக இருக்கும்.

இந்த குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்கிறோமே ஆனால், அருகே இருக்கும் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியாறு அனை போன்ற இடங்களையும் கண்டு ரசிக்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?