heat wave Twitter
தமிழ்நாடு

Morning News Today : ஸ்பெயினில் வெப்ப அலைக்கு 1,000 பேர் பலி - என்ன நடக்கிறது?

NewsSense Editorial Team

ஐரோப்பிய நாடுகள், காலநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியது.

ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்குக் கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெர்வெல்லா கூறுகையில், "நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியதால், கடந்த 10-ம் தேதி முதல் 19 -ம் தேதி வரையிலான 1,047 பேர் இறந்துள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.

Chennai

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.12,02,500 அபராதம்; சென்னையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் நாளை 32-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கென 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

வார்டு ஒன்றுக்கு 1 நிலையான முகாம், 9 நடமாடும் முகாம்கள் என ஒட்டு மொத்தமாக 1,000 சுகாதார குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தெற்கு ரெயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். அனைவரும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், "சென்னையில் கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, முகக்கவசம் அணியாத 2,405 நபர்களிடம் இருந்து ரூ.12,02,500 அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

(Rep)

விடைபெறுகிறார் ராம்நாத் கோவிந்த்; மோடி வழங்கிய விருந்து

ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக 2017-ல் பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால், அவருக்குப் பிரிவு உபசார விழா நேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. அதன்பிறகு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், இருவரும் டெல்லியில் பிரதமர் மோடி வழங்கிய பிரிவு உபசார விருந்தில் கலந்துகொண்டனர்.

அந்த விருந்தில், அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திரௌபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்:

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?