மு.க.ஸ்டாலின்

 

Twitter

தமிழ்நாடு

Morning News Tamil : அத்து மீறி வெற்றி பெற்றவர்கள் பதவி விலகுங்கள் - மு க ஸ்டாலின்

Antony Ajay R

"உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுங்கள்" - மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நேற்று நடைப்பெற்றது. அதில் தி.மு.க தலைமையால் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில், தி.முக-வினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதுகுறித்து தி.மு.க-விடம் கூட்டணிக் கட்சியினர் முறையிட்டு வரும் நிலையில், ``கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காக்க வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தி.மு.க-வினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த ட்விட்டில், ``"கடமை - கண்ணியம் - கட்டுபாடு"தான் கழகத்தவருக்கு அழகு!

அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம்; குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தோழமை உணர்வு எக்காலத்திலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும்!

விலகாவிட்டால் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்!" என முதல்வர் கூறியுள்ளார்.

ஹர்ஜோத் சிங்

"இந்திய தூதரகம் எங்களுக்கு உதவவில்லை" - கீவில் சுடப்பட்ட இந்திய மாணவர்

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனைவிட்டு பொதுமக்கள் தப்பி அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர்.

உக்ரைனுக்கு மருத்துவம் பயிலச் சென்ற இந்திய மாணவர்களும் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை இந்திய அரசு `ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மீட்டுவருகிறது.

டெல்லியைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்திருக்கிறார். போரின் தீவிரம் காரணமாக கீவிலிருந்து தப்பி லிவிவ் செல்ல முயன்றபோது அவர் சுடப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து தப்பிக்க நண்பனுடன் காரில் புறப்பட்டேன்.

அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டேன். அதனால் என் தோளில் தோட்டா பாய்ந்தது. என் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது நான் இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, `என்னால் நடக்க முடியவில்லை... நான் லிவிவ் நகருக்குச் செல்ல உதவுங்கள்’ என்று கேட்டேன். ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. அதன் பின்பே கீவ் நகர மருத்துவமனைக்குச் சென்றேன். இங்கு இன்னும் பலர் வீடுகளுக்குள்ளே பயத்தில் முடங்கிக்கிடக்கிறார்கள். இப்போது உலகுக்கு இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

Sasikala

சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு


முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தார்.

அதன்பின்னர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி கிராமம் சென்று அங்குள்ள பழம் பெருமை வாய்ந்த விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் உவரி வழியாக திருச்செந்தூர் சென்றார்.

இந்த நிலையில், திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துப் பேசியிருக்கிறார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், சசிகலா - ஓ ராஜா இடையேயான இந்த சநதிப்பு அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

D Imman

டி.இமானுக்கு மறுமணம்? மணப்பெண் யார்?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி,இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார் இமான்.

“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

எனது நலன்மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” எனத் தன்னுடைய அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையைச் சேர்ந்த உமா என்பவருக்கும் டி. இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறதாம். பெரியவர்கள் பேசி நிச்சயிக்கப் பட்ட திருமணம் இது என்கிறார்கள். இமான் வீட்டார் மற்றும் உமாவின் வீட்டார் இது தொடர்பாகப் பேசி முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் டி.இமானே இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள்.

Virat Kholi

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக 3 டி20 போட்டியிலும் தோல்வியுற்று தொடரை இழந்தது. இதனையடுத்து இன்று, முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் விராட் கோஹ்லி தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். விராட் கோஹ்லியின் இந்த சாதனைக்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டி தொடங்குவதற்கு முன் அவர் பெயர் பொறித்த தொப்பியை பயிற்சியாளர் டிராவிட் வழங்கினார். மைதானத்தில் விராட் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து இதனை பெற்றுக் கொண்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


100வது டெஸ்டில் விளையாடுவது தவிர கோலி மற்றொரு சாதனையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 6வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கோஹ்லி, நாட்டிலேயே ஐந்தாவது வேகமாக இந்த சாதனை செய்த வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார். சச்சின் டெண்டுல்கர் (15921), ராகுல் டிராவிட் (13288), சுனில் கவாஸ்கர் (10122), விவிஎஸ் லக்ஷ்மண் (8781), வீரேந்திர சேவாக் (8586) ஆகியோருடன் கோஹ்லி 8000 ரன்களைக் கடந்து உள்ளார். ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 33வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், சச்சின் டெண்டுல்கர் (200), ராகுல் டிராவிட் (163), விவிஎஸ் லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132), கபில்தேவ் (131), சுனில் கவாஸ்கர் (125), திலீப் வெங்சர்க்கார் (116), சவுரவ் கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103) மற்றும் வீரேந்திர சேவாக் (103) ஆகியோருக்குப் பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 12வது இந்தியர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வரும் கோஹ்லி, தனது 100வது டெஸ்ட் போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 45 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோஹ்லி அவரது 100வது போட்டியில் சதம் அடிக்கமாட்டார், 45 ரன்களில் அவுட் ஆவார் என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் முன்கூட்டியே பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?