தமிழகத்தில் ஜுன் 13 -ம் தேதி பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில், 12-ம் வகுப்பு மாணர்களுக்கானப் பொதுத்தேர்வு மே 5- ம் தேதி தொடங்கி மே 28- ம் தேதி நிறைவுபெறுகிறது. அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9- ம் தேதி தொடங்கி மே 31- ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30- வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13 வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) வகுப்புகள் ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் நடைபெறுகள் தே்ரவுகள் மே மாதம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பிரதமரிடம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். பிரதமரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்தார். இந்நிலையில் நேற்று, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனைச் சந்தித்து சில கோரிக்கை மணுக்களை ஸ்டாலின் வழங்கினார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் மற்றும் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.21 ஆயிரம் கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் ( S.E.T.C) இயக்கப்படும் படுக்கை வசதிகொண்ட குளிர்சாதன பஸ்கள்; இருக்கை மற்றும் படுக்கை வசதிகொண்ட குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத பஸ்கள் ஆகியவற்றில், பெண்களுக்கென தனியாக படுக்கை எண்.1 எல்.பி. மற்றும் 4 எல்.பி. ஆகிய படுக்கைகளை ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டும் என அறிவிக்கப்ட்டிருக்கிறது.
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கிற இந்தக் கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்துகொள்கிறார்கள். நடப்பு அரசியல், நாட்டின் முக்கிய பிரச்சினைகள், இரு அவைகளிலும் செயல்படும் விதம் உள்ளிட்டவை பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்கின்றனர். பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறும்.
இஸ்லாமிய புனித மாதமான ரமலான் அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. நேற்று அமீரக பிறை பார்க்கும் கமிட்டி ரமலான் மாதம் தொடங்குவது குறித்த அறிப்பை வெளியிட்டது. அதன்படி அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் மாத நோன்பு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து அமீரகம் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா நாடுகளும் இன்று முதல் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இதையொட்டி அமீரகத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று துர்க்மெனிஸ்தான் சென்றார். அதன் தலைநகரான அஷ்காபட்டுக்குச் சென்ற அவரை அந்நாட்டுத் தலைவர்கள் வரவேற்றனர். துர்க்மெனிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. இந்த பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோவை ராம்நாத் கோவிந்த் சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.