வியட்நாம் கம்யூனிஸ்ட் தலைவருடன் மோடி பேச்சு NewsSense
தமிழ்நாடு

Morning News Today : வியட்நாம் கம்யூனிஸ்ட் தலைவருடன் மோடி பேச்சு - இதுதான் நடந்தது

வியட்நாம் - இந்தியா இடையே தூதரக உறவு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நிகுயன் பு திராங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

Antony Ajay R

வியட்நாம் கம்யூனிஸ்ட் தலைவருடன் மோடி பேச்சு!

வியட்நாம் - இந்தியா இடையே தூதரக உறவு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நிகுயன் பு திராங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த உரையாடலின்போது, `இந்திய மருந்துப் பொருட்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றுக்கு வியட்நாமில் சந்தை அனுமதியை பெரிய அளவில் அனுமதிக்குமாறு வலியுறுத்தினார் பிரதமர் மோடி. மேலும், உக்ரைன் போர், தெற்கு சீன கடல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் பரஸ்பரம் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.'

அமைச்சர் ஈஸ்வரப்பா

கமிஷன் குற்றச்சாட்டு கர்நாடக பாஜக வின் செயற்குழு கூட்டம் கூடுகிறது

கர்நாடக பாஜக அரசு தங்களிடம் 40 சதவிகித கமிஷன் வாங்குவதாகக் கான்ட்ராக்டர்கள் சங்கம் பரபரப்பான குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கர்நாடகத்தின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஈசுவரப்பா தன்னிடம் 40 சதவிகிதம் கமிஷன் கேட்டார் என கான்ட்ராக்டர் சந்தோஷ் பட்டீல் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தனது மரணத்துக்கு அமைச்சர் ஈசுவரப்பாவே காரணம் என்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஈசுவரப்பா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் இன்று கர்நாடக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இதில் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கள்ளழகர் இன்று பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததால் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Covid

கொரேனா கட்டுப்பாடுகள் தளர்வு -அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க சர்வதேச பயணங்களுக்கான ஒரு சில கட்டுப்பாடுகளை அமலில் வைத்திருக்கிறது. கொரோனா பாதிப்புள்ள நாடுகளை 4 வகையாக பிரித்துள்ள அமெரிக்கா, நிலை 4 பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாகப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. தற்போது இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளைக் கொண்டுவர உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. அந்த வகையில், நிலை 4 பட்டியலில் இருக்கும் பல நாடுகள் நிலை 3-க்கும் நிலை 1-க்கும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான்

`விலை உயர்ந்த வாட்சை விற்றுவிட்டார்' - இம்ரான் கான்மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புதிதாக பல வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இம்ரான் கான் மீது பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துவருகிறார். இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது பரிசாக வழங்கப்பட்ட வைர நகைகள், பிரேஸ்லெட்டுகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அரசு கஜானாவில் இருந்தன. அவற்றைத் துபாயில் ரூ.14 கோடிக்கு இம்ரான் கான் விற்று விட்டதாக ஷபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

SRH vs KKR

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?