கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா? ட்விட்டர்
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா?

Keerthanaa R

வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை. காலங்கள் கடந்து, பல கடினங்களை கடந்து நிலைத்து நிற்கும் ஒவ்வொரு கட்டிடமும், நினைவுச் சின்னமும் நம் முன்னோர்களின் படைப்பாற்றலை, கலையின் மீதான அவர்களது ஈடுபாட்டினை பறைச்சாற்றுவதாக உள்ளது.

காலத்திற்கு ஏற்ப இங்கு சில மாற்றங்கள் நேர்ந்தாலும் அதன் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காத வண்ணம் அந்த மாற்றங்கள் நிகழும்

அப்படிப்பட்ட ஓரிடம் தான் கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் முத்துநந்தினி அரண்மனை.

கன்னியாகுமரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கடற்கரை, சன் ரைஸ், வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவை தான்.

ஆனால் இங்கு பலரும் அறியாத மற்றொரு இடமும் உள்ளது. அது தான் முத்துநந்தினி அரண்மனை. கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த முத்துநந்தினி அரண்மனை

கரடுமுரடான மலைகளும், பச்சைப்பசேல் என்ற தாவரங்களும் சூழ, மனித வாடை அவ்வளவாக இல்லாமல் ஒரு அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது இந்த பேலஸ்

இந்த வீடு எந்த அரசருக்கும் சொந்தமானது அல்ல என்றாலும், இதன் பாரம்பரிய கட்டமைப்புக்காகவே சிறப்பு பெற்றுள்ளது.

தமிழ், வேணாடு மற்றும் செட்டிநாட்டு பாணியில் இந்த அரண்மனை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டினை வடிவமைக்க கன்னியாகுமரியின் நூற்றாண்டுகள் பழமையான வீடுகளின் கட்டிடப் பொருட்களை மறு சுழற்சி செய்து வடிவமைத்துள்ளனர்.

குறிப்பாக சுண்ணாம்பு, சிவப்பு களிமண், மாட்டு சாணம் மற்றும் வைக்கோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட பிளாஸ்டர் மற்றும் பழைய களிமண்ணால் செய்யப்பட்ட கூரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதவுகளுக்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள், கற்கள், களிமண் செங்கற்கள் என அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்டவை.

வண்ணமயமான, நிலையான மற்றும் கையால் செய்யப்பட்ட ஆத்தங்குடி ஓடுகள் முத்து நந்தினி அரண்மனையின் அழகைக் கூட்டி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுகிறது.

பலகனி, சுத்துக்கட்டு, திண்ணை, முற்றம், ஊஞ்சல் ஆகியவை வைத்து கட்டப்பட்டிருக்கிறது. இதுவே இந்த அரண்மனையின் தனித்துவத்திற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த வீட்டினில் அலங்கரிக்க வைக்கப்பட்டிருக்கும் கலைப்பொருட்கள் பலவும் நூற்றாண்டுகள் பழமையானவை.

மதுரை, காரைக்குடி, திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பொருட்கள்.

இந்த வீடு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு நாம் சென்று தங்க, மூன்று தனித் தனி அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பாத்ரூம் அட்டாச் செய்ப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் 100க்கும் மேற்பட்ட தூண்கள், 50க்கும் மேற்பட்ட ஜன்னல்கள் இருக்கின்றன. இது நம்மை இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறது

எங்கும் வெளியில் போகாமல், நகரத்தின் சலசலப்புகளில் இருந்து தப்பித்து இரண்டு மூன்று நாட்கள் இங்கு தங்கி வரலாம்.

வெயில் காலம் என்றாலும் கூட ஏசி, மின்விசிறி இல்லாமலேயே குளிர்ச்சியான வெப்பநிலை இருக்கும் வண்ணம் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றாலும், இந்த வீட்டினை நிர்வகிப்பவர்களே டூர் பேக்கேஜுகள் வழங்குகிறார்கள். உணவுக்கு வெளியில் ஆர்டர் செய்யலாம், அல்லது, இவர்களே தனியாக சமையல் கலைஞர்களை வைத்திருக்கின்றனர். முன்பே சொல்லிவிடும் பட்சத்தில், அறுசுவை வீட்டு உணவு கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?