Namma falls : கொல்லிமலையில் இப்படி ஒரு அருவியா? நாமக்கலில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot Twitter
தமிழ்நாடு

Namma falls : கொல்லிமலையில் இப்படி ஒரு அருவியா? நாமக்கலில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot

இங்க அதிக பிரபலம் இல்லாமல் ஒரு அருவி இருக்கிறது. கொல்லிமலையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ரம்மியமாக காட்சியளிக்கும் இது கொல்லி மலைக்கே கூடுதல் அழகு சேர்க்கிறது.

Priyadharshini R

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் தான் கொல்லிமலை.

இந்த மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் 'மூலிகைகளின் ராணி' என்று இது அழைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் இந்த கொல்லிமலையில் அகத்தியர், திருமூலர், போகர், கரூரார், காலிங்கநாதர், புலிப்பாணி, சட்டநாதர் என 18 சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு சான்றாக, ஏராளமான குகைகளும் இங்கு அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் கொல்லிப்பாவை என்று அழைக்கப்படும், எட்டுக்கை அம்மன் கோவிலும் அமைந்துள்ளது.

முன்பு கொல்லிமலை குறித்து அறியபடாமல் இருந்தது. தற்போது இது பிரபலமான சுற்றுலா தலமாக மாறிருக்கிறது.

இங்க அதிக பிரபலம் இல்லாமல் ஒரு அருவி இருக்கிறது. ‘நம்ம அருவி’ என்றழைக்கப்படும் இந்த அருவி கொல்லிமலையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த அருவி கொல்லிமலைக்கே மேலும் அழகு சேர்க்கிறது என்றே சொல்லலாம்.

இந்த அருவியில் அதிக ஆர்பரிப்பில்லாமல் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர்.

இந்த அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளித்து முடித்த பின் உடைகளை மாற்ற தனியாக அறையும், வாகனங்கள் நிறுத்தவும் இங்கு வசதிகள் உள்ளது.

நம்ம அருவியின் அருகில் சுற்றுலாப் பயணிகள் சென்று தண்ணீரில் நனைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில், பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?