தமிழக மக்களின் மிகவும் பிடித்தமான மலைப்பிரதேசங்களில் கொடைக்கானல், ஊட்டி முக்கிய இடம் வகிக்கிறது. எத்தனை முறை சென்றாலும் இவ்விடங்கள் சலிக்காமல் இருப்பதற்கு, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல இந்த ஊர்களைச் சுற்றியிருக்கும் இயற்கை எழில்மிகு இடங்கள், இதமான வெப்பநிலை ஆகியவை தான் காரணம் எனலாம்
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மலையின் மற்றொரு சிறப்பம்சம் ஊட்டி மலை ரயில்.
கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, ஊட்டி வரை செல்லும் இந்த ரயில், தினமும் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் குறித்த கொஞ்சம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்
இந்தியாவின் பழமையான ரயில்களில் ஒன்று இந்த ஊட்டி மலை ரயில். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1854ஆம் ஆண்டு மலை ரயில் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வர சுமார் 45 ஆண்டுகள் ஆனதாக குறிப்பிடுகிறது விக்கிபீடியா தளம்.
அதன்படி, 1899ஆம் ஆண்டு தான் முதன் முதலில் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது ஊட்டி மலை ரயில்.
மேட்டுபாளையம் டு ஊட்டி, ஊட்டி டு மேட்டுப்பாளையம் என இரண்டு ட்ரிப்களை மேற்கொள்கிறது இந்த ரயில். இதுவே இந்தியாவின் மிக நிதானமான ரயில். மணிக்கு 10.4 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கிறது.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு வெறும் 46 கிலோமீட்டர் தான் என்றாலும், டாய் டிரெயினில் சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. மிகவும் ஆபத்தான, செங்குத்தான மலைப்பாதையில் ரயில் இயக்கப்படுவதால் இந்த நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கடல்மட்டத்தில் இருந்து 2200 மீட்டர் உயரத்தில் இருக்கிறது ஊட்டி மலை. 330 மீட்டர் உயரத்தில் நகர்ந்து செல்கிறது இந்த மலை ரயில்
இந்த 5 மணி நேரப்பயணத்தில், அழகிய தேயிலை தோட்டங்கள் இருள் சூழ்ந்த சுரகங்கள், கண்கவர் இயற்கை காட்சிகளை கண்டு களித்துக்கொண்டே நாம் பயணிக்கலாம். இந்த ஊட்டி மலை ரயில் 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் 208 வளைவுகளை கடக்கிறது
ஊட்டி மலை ரயில் தினமும் இரண்டு முறை இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை, மீண்டும் ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை.
காலை 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், நண்பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்று அடைகிறது.
மீண்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி, 5.30 மணியளவில் மேட்டுப்பாளையம் வந்து சேர்கிறது.
குன்னூர், வெலிங்டன், அரவங்காடு, கெட்டி மற்றும் லவ்டேல் ஆகியவை ரயில் செல்லும் முக்கிய நிலையங்கள். இதில் முதல் தர மற்றும் இரண்டாம் தர பயணச் சீட்டுகள் கிடைக்கும்.
இந்திய ரயில்வேவின் irctc.com மூலமாகவே இதில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். கோவிட்19 தொற்றுக்கு பிறகு இந்த ஆன்லைன் புக்கிங் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன
மணிரத்னம் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தில் சே. ஷாருக் கான், மனிஷா கொய்ராலா நடித்த இந்த படம் தமிழில் உயிரே என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.
இந்த படத்தின் மிக பிரபலமான பாடல் தையா தையா. இன்றளவும் பலரை ஆட்டம் போடவைக்கும் இந்த பாடல், ஊட்டி மலை ரயிலின் மேல் தான் படமாக்கப்பட்டது.
ஊட்டியை தவிர, இந்தியாவில், டார்ஜிலிங் மற்றும் கால்கா ஷிம்லா மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust