சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை முன்னிட்டு மக்கள் மக்கள் குடியிருக்கும் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த ஒரு வாரமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராஜீராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அந்த மக்கள் 60 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். அத்துடன் அரசுக்கு முறையாகத் தண்ணீர் வரி, மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த கண்ணையா எனும் 55 வயது நபர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொது மக்களும் சமுக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர். திரைப்பட இயக்குநரான பா.ரஞ்சித்,
“ ‘விடியல் ஆட்சியிலும்’ தொடரும் சென்னை பூர்வ குடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா? மாற்றுத் திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்கள் தமிழக வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர் அரசே?” எனச் சமுக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீக்குளித்துக் கொண்ட கண்ணையா இப்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp