Arputham Ammal Twitter
தமிழ்நாடு

பேரறிவாளன் அற்புதம்மாள் : ஒரு தாயின் பாசப் போராட்டம் - நம்பிக்கை பகிர்வு

31 ஆண்டுகளுக்கு பிறகு, உச்சநீதி மன்ற அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த 31 வருட காலத்தில், தன் மகனின் விடுதலைக்காக போராடிய அற்புதம் அம்மாளின் வெற்றிப்பதையின் ஒரு சிறு தொகுப்பு.

Keerthanaa R

31 ஆண்டுகளுக்கு பிறகு, உச்சநீதி மன்ற அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த 31 வருட காலத்தில், தன் மகனின் விடுதலைக்காக போராடிய அற்புதம் அம்மாளின் வெற்றிப்பதையின் ஒரு சிறு தொகுப்பு.

1.சென்னை ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் அற்புதம் அம்மாள். இவரது கணவர் ஞானசேகரன். அறிவு என்கிற பேரறிவாளனின் தாய்.

2. 1991 ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பேரறிவாளன். 43 வயதில், கைது செய்யப்பட்ட தன் மகனுக்காக போராட்ட களத்தை தேர்ந்தெடுத்தவர் இந்த சமகால கண்ணகி அற்புதம் அம்மாள்.

Arputham Ammal

3.1998 ஆம் ஆண்டு தடா நீதி மன்றம் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனை கைதியாக இருந்த பேரறிவாளனுக்கு, அற்புதம் அம்மாளின் தொடர் போராட்டத்தால் 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

4. கைது செய்யப்பட்ட பேரறிவாளன் நிரபராதி தான் என்று தெரியவந்த பிறகும், மத்திய அரசு இவரது விடுதலையை இழுத்தடித்து வந்தது. இதற்கிடையில் அற்புதம் அம்மாள் தன் மகனை வேலூரிலிருந்து, புழல் சிறைக்கு மாற்ற முயற்சித்து கொண்டு இருந்தார். அதே சமயத்தில் உச்ச நீதி மன்றம் தமிழக ஆளுநரிடம் பேரறிவாளினின் விடுதலைக்காக மனு அளித்தது.

Arputham Ammal

5. 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தன் இளமை காலங்களை சிறையிலேயே அனுபவித்து விட்டதால், தன் கடைசி காலக்கட்டத்தில் மகன் தன்னோடு இருக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மீண்டும் காணொளி மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

6. மூன்று முறை விடுதலை என்று அறிவிக்கப்பட்ட பிறகும், விடுதலை அளிக்கபடாமல் இருந்தது. மனம் தளராமல் சட்டத்தின் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியவர் அற்புதம் அம்மாள். புழலில் சிறந்த மருத்துவ வசதிகள் இருப்பதனால் தனது மகனின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அவரை புழலிலேயே வைக்க சிறை அதிகாரிகளிடம் போராடினார்.

தன் மகனுடன் சேர்ந்து, தன் சிகிச்சைக்காகவும் சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.

7.ஒரு கட்டத்தில், மத்திய அரசு விடுதலை மனுவை மறுதலித்துவிட்ட நிலையில், தன் மகனின் அவதிகளை இனிமேலும் பார்த்து சகிக்க மனமில்லாமல், அற்புதம் அம்மாள், பேரறிவாளனை கருணை கொலை செய்யும்படி மனு அளித்திருந்தார்.

8.மரண தண்டனை என்பது குற்றத்திற்கான தீர்வல்ல என்று சொல்லும் அற்புதம் அம்மாள் முதலில் தன் மகனுக்காக மட்டுமே போராட வந்தவர். அதன் பின், சட்டமேதை ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யரின் வழிக்காடுதல்களால், அவரது தனி மனித போராட்டம் ஒரு பொதுநல நோக்காக மாறி, மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

Arputham Ammal

சிறையில் இருப்பவகள் எல்லாம் நிச்சயம் குற்றம் செய்தவராக இருக்கவேண்டியதில்லை என்ற எண்ணம் இந்த இயக்கத்திற்க்கு ஒரு வலுவான ஊன்றுகோலாக இருந்தது.

உலகின் கடைசி விளிம்பு வரை சென்று, இருந்த அத்துனை கதவுகளயும் தட்டி, இன்று 31 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகனின் விடுதலையை பெற்றுள்ளார் இந்த அற்புத தாய்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?