Perarivalan & family Twitter
தமிழ்நாடு

கமல், சத்யராஜ், ஜி.வி. பிரகாஷ் குமார் : திரையுலகம் வரவேற்கும் பேரறிவாளன் விடுதலை

Keerthanaa R

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவளுனுக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விடுதலை கிடைத்துள்ள நிலையில், உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பால், திரைபிரபலங்களும் உணர்வுபொங்க தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் "இது ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி" என்று பதிவிட்டிருந்தார்

இயக்குநர் சீனு ராமசாமி "31 வருடங்கள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்" என்று நெகிழ்ந்திருந்தார்

நடிகர் சத்தியராஜ் இந்த விடுதலை தீர்ப்பை கொண்டாடும் வகையில் ஒரு காணொலி பதிவை பகிர்ந்திருந்தார். அறிவின் விடுதலைக்காக போராடிய அனைத்து அரசியல்வாதிகள், மற்றும் தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், "பல வருடங்களாக அற்புதம்மாளின் முகத்தில் சிரிப்பை பார்க்க காத்திருந்தோம். இதற்காக போராடியவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்

இவர்களுடன், உலக நாயகன் கமல் ஹாசனும் தன் ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்." என்று பதிவிட்டிருந்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?