ஒரு டிப்ரிப் செல்ல வேண்டும் என்றாலே வெளிமாநிலம், வெளிநாடு என பிளான் செய்கிறார்கள். ஆனால் உள்ளூரிலேயே பல இடங்கள் உள்ளன.
தமிழ்நாடு என்று எடுத்துகொண்டால் பழமையான பாரம்பரிய கலாச்சாரங்கள், குளிர் பிரதேசங்கள், கண்கவர் கடற்கரைகள், திகிலூட்டும் இடங்கள், காலத்தால் அழியாத கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற கோயில்கள் என மாநிலம் முழுவதும் பார்க்க பல இடங்கள் உள்ளன.
பல சுற்றுலா இடங்கள் பற்றி பெரிதாக யாருக்கு தெரிவதுமில்லை. வெளிநாடு மற்றும் வெளிமாநிலச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்திய சுற்றுலா துறை உள்ளூர் மக்களை கவர புதிய முயற்சியை எடுத்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு தற்போது தான் தமிழக சுற்றுலாத் துறை கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஆன்மிக சுற்றுலா, ஆடி மாத ஆன்மிக சுற்றுலா போன்றவற்றை தொடங்கி இருக்கிறது. இந்த அடிப்படையில் மதுரையில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்டவற்றை இணைத்து ஆடிமாத ஆன்மிக சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை தற்போது மதுரை - கொடைக்கானல், மதுரை - ராமேசுவரம் போன்ற இடங்களுக்கு சிறப்பு ஏசி பஸ்கள் மூலம் ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
‘மதுரை சிட்டி சுற்றுலா’வில் மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், காந்தி அருங்காட்சியகம் போன்றவை இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சுற்றுலாவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல், மதுரை - கொடைக்கானல், மதுரை - ராமேஸ்வரம் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏசி வசதி கொண்ட அரசு பஸ்களில் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் இந்த சுற்றுலாவுக்கு நேரம் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விவரம், அரசு ஒப்புதல் வழங்கியதும் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust