தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் போக்குவரத்துக் கழகம் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது.
இருப்பினும் பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் கூறியிருக்கிறார்.
அதன்படி, தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 95.53% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 16,539 பேருந்துகளில் 15,800 பேருந்துகள் இயங்கி வருகின்றன என போக்குவரத்துத்துறை தகவல்
சென்னை மண்டலத்தில் 96.78% பேருந்துகள் இயக்கம். 3,233 பேருந்துகளில் 3,129 பேருந்துகள் இயக்கம்
விழுப்புரம் மண்டலத்தில் 90.8% பேருந்துகள் இயக்கம். மொத்தமுள்ள 2,550 பேருந்துகளில் 2,297 பேருந்துகள் இயக்கம்
சேலம் மண்டலத்தில் 98.07% பேருந்துகள் இயக்கம். 1,349 பேருந்துகளில் 1323 பேருந்துகள் இயக்கம்.
மதுரை மண்டலத்தில் 98.43% பேருந்துகள் இயக்கம். 2,166 பேருந்துகளில் 34 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.
கோவை மண்டலத்தில் 94.56% பேருந்துகள் இயக்கம். 2,296 பேருந்துகளில் 2,171 பேருந்துகளு இயக்கம்.
நெல்லை மண்டலத்தில் 99.57% பேருந்துகள் இயக்கம். 1636 பேருந்துகளில் 7 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை
கும்பகோணம் மண்டலத்தில் 94.02% பேருந்துகள் இயக்கம். 3,178 பேருந்துகளில் 2,988 பேருந்துகள் இயக்கம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust