சோழர்களை ஏன் பழிவாங்க துடிக்கிறாள் நந்தினி?  டிவிட்டர்
தமிழ்நாடு

பொன்னியின் செல்வன்: யார் இந்த நந்தினி? சோழர்களுக்கும் இவருக்கும் என்ன பகை?

இந்த கதையின் கதாபாத்திரங்கள் யார் யார்? அவர்கள் கதையில் ஆற்றும் பங்கு என்ன? யாரால் கதை முன்னோக்கி செல்கிறது? எனப் பல கேள்விகள் இருக்கும். அவற்றில் முக்கியமான கேள்வி, நந்தினி ஏன் சோழர்களை பழிவாங்கத் துடிக்கிறாள்? என்பது.

Keerthanaa R

கல்கி எழுதிய புத்தங்களில் மிகவும் விரும்பப்படுவது, திரும்ப திரும்ப மக்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருப்பது பொன்னியின் செல்வன் நாவல். கற்பனை கலந்து எழுதப்பட்ட இந்த கதை, பல தலைமுறைகளுக்குத் தமிழர் வரலாற்றை கொண்டு சேர்த்து வருகிறது. 

மூன்று முறை முயன்ற பின்னர், தற்போது படமாக்கப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன் நாவல். இரு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பகுதி வரும் செப்டம்பர் 30 அன்று வெளியாகிறது. 

படத்தை பார்க்க புத்தகம் வாசித்தவர்கள், படித்திராதவர்கள் என கலவையான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், படம் பார்க்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. கதாபாத்திரங்கள் யார் யார்? அவர்கள் கதையில் ஆற்றும் பங்கு என்ன? யாரால் கதை முன்னோக்கி செல்கிறது? எனப் பல கேள்விகள் இருக்கும்.

அவற்றில் முக்கியமான கேள்வி, நந்தினி ஏன் சோழர்களை பழிவாங்கத் துடிக்கிறாள்? என்பது. 

முதலில் நந்தினி யார்? அவளுக்கும் சோழர்களுக்கும் என்ன உறவு?

பாண்டிய நாட்டில் வசித்து வந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தந்தைக்கு ஒரு நாள் நந்தவனத்தில் பெண் குழந்தை ஒன்று கிடைக்கிறது. குழந்தையை எடுத்து வந்து அன்போடு வளர்க்கிறார்கள் நம்பியின் குடும்பத்தினர். நந்தவனத்தில் கிடைத்ததால் அவளுக்கு நந்தினி எனப் பெயர்சூட்டி வளர்க்கின்றனர்.

நல்ல களையும் யவ்வனமும் கொண்டவள் நந்தினி. ஆழ்வார்க்கடியான் அவளை தன் உடன் பிறந்த தங்கையாகவே பாவித்து பாசத்தோடு வளர்த்தான். தந்தை இறந்த பிறகு, தங்கையை வளர்க்கும் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டான். 

வைஷ்ணவன் ஆதலால் நம்பியுடன் இவளுக்கும் பெருமாளின் மீது பக்தி அதிகரித்தது. நந்தினியும் கிட்ட தட்ட இன்னொரு ஆண்டாளாகவே மாறியிருந்தாள். நம்பி ஒரு முறை யாத்திரை முடித்து வர தாமதமானது. திரும்பி வந்தபோது, நந்தினி இல்லை...

ஆதித்த கரிகாலன்

நந்தினிக்கு என்ன நடந்தது? 

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கு சேவூர் போர் நடந்தது. இந்த போரில் பாண்டியர்களை சர்வ நாசம் செய்தது சோழர் படை. ஆனால், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் மட்டும் உயிர் தப்பித்தான். சோழர்களிடம் சிக்காமல் மறைந்து வாழ்ந்து வந்தான். அவன் தஞ்சம் புகுந்திருந்தது நந்தினியிடத்தில்! 

பாண்டியனை தேடி வந்த ஆதித்த கரிகாலர்  நந்தினியின் கண் முன்னே அவன் தலையை கொய்கிறார்...

பழுவேட்டரையருடன் திருமணம்

பிராயம் முதிர்ந்த காலத்தில் இளம்பெண் ஒருத்தியை மணக்கிறார் சோழ நாட்டின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர். சோழ நாடே பார்த்து பொறாமைக்கொள்ளும் அளவிற்கு சுந்தரவதியாக இருந்தவள் வேறு யாரும் இல்லை, நந்தினி தான். நந்தினியை மணந்ததிலிருந்து  அவளது கைப்பாவையாக மாறிவிட்டார் பழுவேட்டரையர் என்ற குற்றச்சாட்டு அதன் பிறகு வலுப்பெறத் துவங்குகிறது

ஆதித்த கரிகாலன் பாண்டியனை கொன்ற பிறகு தான், நந்தினி பழுவேட்டரையரை மணந்தாள். காரணம், வீரபாண்டியன் நந்தினியை மணப்பதாக வாக்களித்திருந்தான், நந்தினியும் வீரபாண்டியன் மீது காதல் கொண்டிருந்தாள். தன் காதலனை கொன்றதனால், ஆதித்தனை பழிவாங்க திட்டமிட்டாள். போர் முடிந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த பழுவேட்டரையரை, பாண்டியனின் ஆபத்துதவிகளின் உதவியோடு தன் வலையில் விழ வைத்தாள் நந்தினி...

சோழர்களின் மீது என்ன கோபம்?

நந்தினி சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பழிவாங்க துடிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சிறு வயதில் நம்பியின் குடும்பம் பழையாறை வசித்துவந்தது. அங்கு முதன் முதலில் இளவரசர் கரிகாலரையும், இளவரசி குந்தவையையும் சந்திக்கிறாள் நந்தினி. 

நந்தினியின் அழகை கண்டு பொறாமைக் கொள்கிறாள் குந்தவை. இளவரசிக்கு கிடைக்கும் செல்வாக்கைக் கொண்டு பொறாமைக் கொள்கிறாள் நந்தினி. இப்படி பாலிய பருவத்திலேயே இருவருக்கும் இடையில் பகை ஆட்கொள்ள, தமையன் ஆதித்த கரிகாலன் நந்தினியின் மீது காதல் வயப்பட்டுள்ளதை அறிகிறாள் குந்தவை. 

நந்தினியை வெளியேற்றுதல்

உடனுக்குடன் செம்பியன் மாதேவியின் உதவியோடு நந்தினியை பழையாறை விட்டு அனுப்புகிறாள் குந்தவை. காதலை பிரித்த காரணத்தினால் ஆதித்தனுக்கு குந்தவை மீது கோபம். அரச குலத்தில் பிறந்தால் தம் விருப்பத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்ற கோபம் நந்தினிக்கு.

மற்றொரு புறம் உயிரோடு விட்டு விடுங்கள் எனக் கெஞ்சியும் வீரபாண்டியனை, தன் காதலனை கண் முன்னே கொல்கிறான் ஆதித்த கரிகாலன்.

இவ்வனைத்தும் ஒன்றுகூடிப் பழிவாங்கும் எண்ணத்தை வேரூன்ற செய்கிறது நந்தினியின் இதயத்தில். இவ்வறாக, ஆதித்தனை பழிவாங்க, சோழ அரசை அடியோடு அழிக்க, பாண்டியனின் வாரிசை மீண்டும் மன்னனாக்க பழுவேட்டரையரை மணக்கிறாள் நந்தினி. இதற்காகவே, பாண்டியர்களின் ஆபத்துதவிகளை சோழ நாட்டிற்குள் அழைத்தும் வருகிறாள்.

நந்தினியின் கடைக்கண் பார்வைக்கு இணங்காதவர் யாரும் இல்லை. கந்தன்மாறன், பார்த்திபேந்திர பல்லவன் என, அவள் அழகில் மயங்கி அவள் சொல்லுக்கு அடிமையானவர்கள் ஏராளம். ஆனால் இவர்களில் இருந்து நந்தியின் வலையில் சிக்காமல் சுதாரித்துக் கொண்ட ஒருவனும் கதையில் உண்டு...

தான் ஏற்றுக்கொண்ட சபதத்தை நிறைவேற்றினாளா நந்தினி? 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?