Puducherry Sea Water Turns Red For 3rd Time In A Month Twitter
தமிழ்நாடு

புதுச்சேரி : ஒரே மாதத்தில் 3வது முறை; சிவப்பு நிறமாக மாறும் கடல் நீர் - என்ன காரணம்?

Priyadharshini R

புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் அலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது அரசாங்க அதிகாரிகளையும் சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் நடந்த இந்த இயற்கைக்கு மாறான நிகழ்வால் சுற்றுலா பயணிகள் வியப்படைந்துள்ளனர்.

தற்போது கடலில் நிற்கவோ, குளிக்கவோ அரசு தடை விதித்துள்ளது.

மேலும் கடற்கரையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு கடற்கரை காவலர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது மூன்றாவது முறையாக நடந்துள்ளது.

இது முதலில் அக்டோபர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது. இது புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாசிப் பூக்கள் மற்றும் கடலில் கழிவுநீர் வெளியேற்றத்தின் விளைவு தான் இதற்கு காரணம் என்று கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்.சி.சி.ஆர்) கூறியுள்ளது. முதற்கட்டமாக, புதுச்சேரியில் ப்ரோமனேட் கடற்கரையின் வடக்குப் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

என்.சி.சி.ஆர் இயக்குனர் எம்.வி.ரமண மூர்த்தி கூறுகையில், ’’புதுச்சேரி கடலின் சிவப்பு அலைக்கு முதன்மைக் காரணம் வடக்கிலிருந்து தெற்கே திரும்பும் நீரோட்டம், வடக்கிலிருந்து வரும் கழிவுநீருடன் கலக்கிறது. மக்கள் அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை’’ என கூறினார்.

தி இந்து நாளிதழின் அறிக்கையின்படி, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (பிபிசிசி) ஏற்கனவே முதற்கட்ட சோதனைகளை நடத்தியது. நீர் மாதிரிகள் உயிரியல் மற்றும் ரசாயன பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?