புலிகுண்டு: சென்னைக்கு அருகில் இருக்கும் இரட்டை மலை - அட்வென்சர் ட்ரிப்புக்கு தயாரா?  Twitter
தமிழ்நாடு

புலிகுண்டு: சென்னைக்கு அருகில் இருக்கும் இரட்டை மலை - அட்வென்சர் ட்ரிப்புக்கு தயாரா?

கால்நடையாக மலையேறுபவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கலாம். அது ஆரம்பத்தில் மட்டும் தான்!

Keerthanaa R

அட்வென்சர் சுற்றுலா செல்பவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டிரெக்கிங் தான். சிறிய குன்றுகள் தொடங்கி வளைந்து நெளிந்து போகும் கரடு முரடான பாதைகள் இருக்கும் பெரிய பெரிய மலைக்காடுகள் வரை டிரெக்கிங் செல்பவர்களை நாம் பர்த்திருக்கிறோம்.

இப்படி ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாபுட்ற மாதிரி என்று சொல்பவர்களுக்காகவே அடுத்த டிரெக்கிங் டெஸ்டினேஷனை பற்றி இந்த பதிவில் கூறியுள்ளோம்.

சென்னைக்கு அருகில் தான் இருக்கிறது இந்த இடம்!

ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் அமைந்திருக்கிறது புலிகுண்டு மலை. சென்னையிலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இவ்விடத்திற்கு அரை நாளில் சென்றடைந்து விடலாம்.

வெயிலை தவிர்க்கவேண்டும் என்றால் காலை 6 மணிக்கெல்லாம் நீங்கள் மலையேற தொடங்கி விடவேண்டும். பச்சை பசேல் என்ற மரங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள் சூழ நாம் செல்லும் பாதையே நமக்கு பாதி அமைதியை தந்துவிடும். தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் இணைக்கும் வழிகளில் நாம் செல்வதால் இரு மாநிலத்தவரையும் நாம் இங்கு காண முடிகிறது.

இந்த புலிகுண்டு மலைகள் இரட்டை மலைகளாகும். மென்மையான தார் ரோடு மெல்ல கரடு முரடான மண் பாதையாக மாற, மலையைச் சுற்றி ஏற்றப்பாதையை நீங்கள் அடையலாம்

காரில் செல்பவர்களுக்கு இது கொஞ்சம் சவாலான பயணமாக தான் இருக்கும். கால்நடையாக மலையேறுபவர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கலாம். அது ஆரம்பத்தில் மட்டும் தான்!

மலைகளில் நடு நடுவே நின்று ரசிக்க சைட் சீயிங் ஸ்பாட்ஸ் இருக்கின்றன.

இந்த புலிகுண்டு மலையேற்றத்தை மிகவும் ஆபத்தான டிரெக்கிங் எனக் கூறுகின்ரனர். புலிகுண்டு மலையை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை காணுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashne

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?