ross taylor twitter
தமிழ்நாடு

"ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் என்னை கன்னத்தில் அறைந்தார்" - முன்னாள் வீரர் பகீர் தகவல்

கடந்த ஏப்ரல் மாதம் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் அவரது சுயசரிதைப் புத்தகம் வெளியாகியது.

Antony Ajay R

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதையில், 2011ம் ஆண்டு அவர் விளையாடியபோது டக் அவுட் ஆனதால் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் தன்னை கன்னத்தில் அடித்ததாக கூறியிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 2007ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 2008 முதல் 2014 வரை ஐபிஎல் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் அவரது சுயசரிதைப் புத்தகம் வெளியாகியது.

பிளாக் அண்ட் ஒயிட் என்ற பெயரில் வெளியான அந்த புத்தகத்தில் தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்திருந்திருந்தார். அதில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற போது நடந்த கசப்பான சம்பவத்தை பற்றியும் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்க்கியிருக்கிறது.

"அந்தப் போட்டியில் நான் டக் அவுட் ஆனபோது 'டக் அவுட் ஆவதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் கொடுக்கவில்லை' என்று கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என் முகத்தில் நான்கு முறை அறைந்தார். அவர் அறைந்தது கடினமாக இல்லை. மேலும், முழுக்க முழுக்க விளையாட்டுக்காக இது என்பதும் என்னால் சொல்ல முடியவில்லை.

எனினும், தொழில்முறை விளையாட்டு சூழல்களில் இதுபோன்று நடந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார் ராஸ் டெய்லர்.

டெய்லர் கூறியுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?