Lady Conductor Twitter
தமிழ்நாடு

அரசு பேருந்தில் பணியமர்த்தப்பட்ட பெண் நடத்துநர் - என்ன சொல்கிறார் இந்திராணி?

ஒரு மாத பயிற்சிக்கு பிறகு வேலையில் சேர்ந்த இந்திராணி, ராசிபுரம்-சேலம் வழித்தடத்தின் அரசு நகர விரைவு பேருந்தின் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராசிபுரத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துநர் இவராவார்.

Keerthanaa R

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பேருந்தின் நடத்துநராக இந்திராணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெண் நடத்துநர்கள் பணியாற்றி வரும் நிலையில், ராசிபுரத்தில் ஒரு பெண், நடத்துநராக பணியமர்த்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.


ஆசிரியர், வங்கி உத்தியோகம் தான் பெண்களுக்கு ஏற்ற பணி என இருந்த நிலை மாறி இன்று பல துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் பெண் நடத்துநர்களும் அதிகம்.

Whistle

அப்படி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார் ராசிபுரம் அரசு பேருந்து நடத்துநர் இந்திராணி. இவர் ராசிபுரம் அடுத்த சிங்காளந்தபுரம், பழனியப்பனூரை சேர்ந்தவர். இவரது கணவர் தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.


இந்திராணியின் தந்தை சேலம் மெய்யனூர் டிப்போட்டில் முதுநிலை பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வந்தார், இவரது மறைவுக்குப் பிறகு கருணை அடிப்படையில், இந்திராணியின் சகோதரருக்கு வேலை செல்ல, அவர் அதை வேண்டாம் எனக் கூறிய நிலையில், அந்த வேலை தற்போது இந்திராணிக்கு சென்றுள்ளது.


ஒரு மாத பயிற்சிக்கு பிறகு வேலையில் சேர்ந்த இந்திராணி, ராசிபுரம்-சேலம் வழித்தடத்தின் அரசு நகர விரைவு பேருந்தின் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராசிபுரத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துநர் இவராவார். காலை 5 மணிக்கு பணியை துவங்கும் இவர், இரவு 10 மணி வரை பம்பரம் போல சுழல்கிறார்.

Bus

"எந்த துறையாக இருந்தாலும் சாதிக்க விரும்பினால், ஆணோ பெண்ணோ, யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்" என்கிறார் இந்திராணி. 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதில் இந்திராணியும் ஒருவர். ஆனால் அவர் மட்டும் தான் பெண்.

ஒரு மாத பயிற்சிக்கு பின் வேலைக்கு சேர்ந்ததில், இப்போது வேலை எளிதாகி விட்டதாகவும், , மிகுந்த ஆர்வத்துடன், மகிழ்ச்சியாக இப்பணியாற்றி வருவதாக கூறுகிறார் இந்திராணி. மேலும் சக ஊழியர்கள், அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்குவதால், முழு விருப்பத்துடன் சந்தோஷமாக வேலை செய்வதாகவும் அவர் கூறுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?