சவுக்கு சங்கர் News Sense
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடந்தது என்ன?

நீதித்துறையில் ஊழல் நிரம்பியிருக்கிறது என யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Antony Ajay R

யூடியூப் சேனல்களில் அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் அரசு நிர்வாகத்தை தொடர்ந்து விமர்சித்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது நேர்காணல்கள் பல முறை சர்ச்சையானதுடன், பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

சமீபத்தில் நீதித்துறையில் ஊழல் நிரம்பியிருக்கிறது என யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு காரணமான வீடியோ க்ளிப்கள் அல்லது தட்டச்சு பதிவுகளை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசமும் வேண்டினார்.

அதற்கு நீதிபதிகள், "வீடியோவை வெளியிட்டது, பேசியது நீங்கள். பின்னர் எதற்காக கேட்கிறீர்கள்? உங்களுக்கு அவற்றின் நகல் தேவையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில் தேவை என பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்ற பதிவாளரிடம் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு புதியதா அல்லது பழையதா என சவுக்கு சங்கர் தரப்பு கேள்வி எழுப்பினர். அதற்கு பேசிய உங்களுக்கு ஞாபகம் இல்லையா? என நீதிபதிகள் கேட்டனர்.

"நான் பல பேட்டிகள் கொடுத்துள்ளேன். அத்தனையும் என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது" என்று சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். அத்துடன் தனக்கு கால அவகாசம் தேவை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கால அவகாசம் தேவை என்பதை எழுத்துப் பூர்வமாக கொடுத்த சவுக்கு சங்கர், 6 மாதம் கால அவகாசம் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் 'இது குறித்து வெளியில் சென்று எந்த பதிவையும் போட மாட்டேன் என சவுக்கு சங்கர் உறுதியளித்தால் கால அவகாசம் வழங்கலாம்' என்று கூறியதாகவும், அதற்கு சவுக்கு மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, கடந்த வாரங்களிலும், இன்றும் இந்த வழக்கு குறித்து சவுக்கு சங்கர் பேசியுள்ளார். நீதிமன்றத்தின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் என பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஒரு வாரத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?