மகனுடன் பேச பள்ளி மாணவியை வற்புறுத்திய ஆசிரியர் Twitter
தமிழ்நாடு

உடுமலை: மகனுடன் பேச பள்ளி மாணவியை வற்புறுத்திய ஆசிரியர்- நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

பள்ளியில் மட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்றும் மாணவிகளை கட்டாயப்படுத்தியுள்ளார். இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறி மற்ற கதைகள் எல்லாம் பேசியுள்ளார்.

Priyadharshini R

உடுமலை அருகே தனது மகனுடன் பேச சொல்லி வற்புறுத்திய பள்ளி ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்திப்பிரியா.

இவர் மீது பள்ளி மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

பள்ளியில் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு குடும்ப விவாகாரங்களை பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி மாணவி ஒருவரை மருமகளே என்று அழைத்ததுடன் அவரது மகனிடம் பேசச் சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பள்ளியில் மட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்றும் மாணவிகளை கட்டாயப்படுத்தியுள்ளார். இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறி கதைகள் பேசியதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு வேளை அந்த மாணவிகள் அவரின் செல்போன் அழைப்பை ஏற்காவிடின் தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் மற்ற ஆசிரியர்களுடன் சண்டையிட்டு விட்டு வகுப்பறையில் வந்து பழிக்குப் பழி என கரும்பலகையில் எழுதி மாணவர்களின் மனதில் பழி உணர்வை விதைக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.

இப்படி சாந்திப்பிரியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?