ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநர் பணி நீக்கம் - கனிமொழியின் விளக்கம் என்ன? Twitter
தமிழ்நாடு

ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநர் பணி நீக்கம் - கனிமொழியின் விளக்கம் என்ன?

Priyadharshini R

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பஸ் ஓட்டுவது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாவதுண்டு.

இந்த நிலையில் நேற்று காலை திமுக கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

அப்போது அதே பேருந்தில் பயிற்சியாக இருந்து வரும் பெண் நடத்துனர் அன்னத்தாய் கனிமொழியிடம் டிக்கெட் எடுங்கள் என்று கேட்டுள்ளார். இல்லை இல்லை வேண்டாம் மேடம் நான் கொடுக்கிறேன் என்று ஷர்மிளா கூற, கனிமொழி சிரிப்புடன் தனது உதவியாளர் மூலம் டிக்கெட் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் கனிமொழி பீளமேடு பகுதியில் இறங்கி ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றுவிட்டார்.

அதன் பின்னர் ஷர்மிளா என்னை சந்திக்க வந்த கனிமொழி எம்.பி இடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என கேட்டுள்ளார். இது இவர்களுக்குள் வாக்குவாதமாக மாறி உள்ளது.

இதைத் தொடர்ந்து ஷர்மிளா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு இடம் நடந்ததை தெரிவித்தார். அப்போது ஷர்மிளாவின் தந்தையும் உடன் இருந்துள்ளார்.

பேருந்து உரிமையாளர் நீ பிரபலமாகுவதற்காக எல்லாரையும் பேருந்துக்கு அழைத்து வருகிறார் என்று கூறிய நிலையில் ஷர்மிளா பணியை விட்டு நின்று கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதபொருளாக இருந்தது. இதனையடுத்து இது குறித்து கனிமொழி கூறுகையில், நான் ஷர்மிளாவிடம் பேசினேன், வேறு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறினேன்.

என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றேன். ஆனால் ஷர்மிளா மன உளைச்சல் இருப்பதாகவும், இனிமே யாரிடமும் பணிபுரிய போவதில்லை, சொந்தமாக தொழில் தொடங்கபோவதாக என்னிடம் கூறினார் என்று கனிமொழி தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?