ஜிம் பயிற்சியாளர் மரணத்துக்கு ஸ்டெராய்டு தான் காரணமா? அதிக பயன்பாட்டால் என்ன SideEffects? Twitter
தமிழ்நாடு

ஜிம் பயிற்சியாளர் மரணத்துக்கு ஸ்டெராய்டு தான் காரணமா? அதிக பயன்பாட்டால் என்ன SideEffects?

Priyadharshini R

சென்னை அடுத்த ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ( வயது 25 ) என்பவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

நெமிலிச்சேரியை சேர்ந்த ஆகாஷ் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆகாஷ் மாநில அளவிலான ஆணழகன் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் அவருடைய 2 கிட்னியும் செயல் இழந்த நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெராய்டு என்றால் என்ன?

நம் உடலில் உள்ள அட்ரினல் சுரப்பில் சுரக்கும் ஒரு வகை ஹார்மோனை தான் ஸ்டீராய்டு என்கிறோம்.

இந்த ஹார்மோன் உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் அளவைச் சீராக வைத்திருக்கவும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

அதேபோல வீக்கத்தைக் குறைப்பது (Anti-inflammatory ) இதன் முக்கியப் பணி.

இந்த ஹார்மோன் சுரப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது வேறு எந்த மருத்துவ காரணங்களுக்காகவோ இவை வெளியில் இருந்து உடலுக்கு அளிக்கப்படுகிறது.

எடுத்துகாட்டாக சொல்ல வேண்டும் என்றால் உடல் நலம் குன்றியவர்கள் அல்லது மனஅழுத்த நோயுடன் இருப்பவர்களின் உடலுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு தேவைப்படும்.

அதேபோல, ஒரு நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது, உடலில் சுரக்கும் ஸ்டீராய்டு பற்றாக்குறையாக இருக்கும்பட்சத்தில் தேவையான ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்.

இப்படி வெளியிருந்து கொடுக்கப்படும் ஸ்டீராய்ட்களில் `அனாபாலிக் ஸ்டீராய்டு' (Anabolic steroids), 'கார்டிகோ ஸ்டீராய்டு' (Corticosteroid) என இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன.

முதல் வகை, பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களுக்கு தசைகளுக்கு வலுவையும் ஆற்றலையும் தரக் கூடியது.

மற்றொன்று, மருத்துவத் துறையில் பயன்படக்கூடியது. ஊசி, மாத்திரை, களிம்பு எனப் பல்வேறு வகைகளில் ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டில் இருக்கிறது.

குறிப்பாக, அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டுவலி பாதிப்புள்ளவர்கள், நரம்பு தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு ஸ்டீராய்டு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடியதாக உள்ளது.

சரும நோய்களுக்கும் நல்ல பலன் தரக்கூடியது இந்த ஸ்டீராய்டு.

குறைந்த பயன்பாட்டால் பக்கவிளைவு ஏற்படுவதில்லை

பொதுவாக, ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைந்த அளவில், மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த நாள்களுக்கு எடுத்துக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படாது.

அதிகளவில் உட்கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

அதே போன்று ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும் அனைவருக்கும் இந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதில்லை. அதிகளவில் எடுக்கும் பட்சத்தில் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

பக்கவிளைவுகள் என்ன?

சிலர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாங்களாகவே தனிப்பட்ட காரணகளுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஸ்டீராய்டு மருந்துகளை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது.

அதிகளவு எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

சிலருக்கு எடை அதிகரிக்கும், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும், முகத்தில் வீக்கம் ஏற்படும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் இவ்வகை மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?