பெட்ரோலின் விலை இன்று 110.11 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி, 107.45 ரூபாயாக இருந்தது. வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் நெருக்கடிதான். பெட்ரோல் விலை உயர்வு மற்ற அன்றாடத் தேவைகளையும் பாதிக்கிறது. இச்சூழலில் பெட்ரோலை மிச்சப்படுத்த நம்மால் முடிந்த என்னென்ன சிறு சிறு மாற்றங்களையும் பராமரிப்புகளையும் செய்யலாம் எனப் பார்க்கலாம்.
முதலில் நீங்கள் வண்டி ஓட்டும் ஸ்டைலை கவனியுங்கள். வேகமாக ஓட்டுபவரா அல்லது மெதுவாக ஓட்டுபவரா என்று…
குறுகிய தூரத்துக்குச் செல்வதற்கே, மிக வேகமாக ஆக்ஸிலேட்டரை திருப்பி ரேஷ்ஷாக ஓட்டுபவரா எனக் கவனித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் இதுபோன்ற வேகத்தைத் தவிர்க்கவும். ஆக்ஸிலேட்டரை அடிக்கடி முறுக்குவதைத் தவிர்க்கவும். குறிப்பாக ரெட் சிக்னலில் இதை அதிகம் பேர் செய்கின்றனர். இதனால் பெட்ரோல் அதிகம் இழுக்கும்.
பெரிய, பெரிய சிக்னலில் வண்டி ஆஃப் செய்து விடுங்கள்.
மென்மையாக, பாதுகாப்போடு வண்டி ஓட்டும் பழக்கத்துக்கு மாறுங்கள். அதாவது விழிப்புடன் வண்டி ஓட்டுங்கள். சாலையில் எதாவது ஆபத்தான சூழ்நிலைகள் வரலாம்.
திடீரென பிரேக் போடும் நபர்களா நீங்கள். அடிக்கடி இப்படிச் செய்பவரா… மிக வேகமாகச் சென்று திடீர், திடீர் என பிரேக் ஓடும் நபரா… இந்தப் பழக்கத்தைத் தவிர்க்கவும். இதுவும் பெட்ரோல் இழுக்கும் செயல்தான்.
நிலையான வேகத்திலே வண்டியை ஓட்ட வேண்டும். முடிந்தால் cruise control -ஐ வாங்கி உங்களது வாகனத்தில் பொருத்திக் கொள்ளவும். இதை கார், பைக்கில் பொருத்திக் கொள்ளலாம். இது வண்டி ஓட தேவைப்படும் பெட்ரோல் அளவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும். இது ஒரு எளிமையான கட்டுப்பாடு அமைப்பு. ஒரு குறிப்பிட்ட சாலை வேகத்திலே, நீங்கள் வண்டி ஓட்டி செல்வதற்காக இந்த கன்ட்ரோலர் உதவுகிறது.
மேலும், உங்கள் வாகனத்தை நன்றாகப் பராமரிக்கவும். பராமரிக்காத வண்டி அடிக்கடி ரிப்பேர் ஆகலாம்.\
டயர்கள், டயர்களில் சரியான பிரஷர் உள்ளதா எனச் சரி பார்க்கவும்.
வண்டியின் எஞ்சினை சரியாகப் பராமரிக்கவும். ஏர் ஃபில்டர், தெர்மோஸ்டாட்ஸ், பெட்ரோல், டீசல் இன்ஞெக்டர்ஸ், இக்னிஷன் சிஸ்டம் போன்றவை சரியாகப் பராமரிக்கவும்.
உங்களது வாகனத்தின் எஞ்சினை தேவையில்லாமல் இயக்க வேண்டாம்
குறிப்பாக கேரேஜ்கள், அண்டர் கிரவுண்ட் பார்கிங் போன்ற பகுதிகளில் நச்சுப் புகை வெளியேறுவதைத் தவிர்க்கவும்.
நீங்கள் வண்டியில் யாருக்காகவோ காத்திருந்தாலோ, அப்போது ஏ.சி தேவைப்பட்டாலோ, எதாவது இண்டோர் இடங்களில் காத்திருக்கும்படி இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். இந்த நேரங்களில் வண்டியில் ஏ.சி போட்டால் தேவையில்லாத பெட்ரோல் செலவுதான் ஆகும்.
உங்களது தேவைக்கு ஏற்ப கார் வகை/ எஞ்சின் அளவு ஆகியவற்றைத் தெரிந்து அந்த வண்டியை ஓட்டுங்கள். பெரிய கார்கள், பெரிய ஸ்டராங்கான எஞ்சின்களை கொண்டிருக்கும் என்பதால் பெட்ரோல் அதிகம் எடுக்கும். ஓட்டுவதற்கும் சுலபமாக இருக்காது.
தினசரி பயணங்களில், ஷேர் செய்து காரில் பயணிக்கலாம். ரோட்டெஷனலாக நண்பர்கள் ஒரே ஏரியாவில் இருந்தால், கார் ஷேரிங் செய்துகொள்ளலாம்.
அட்வான்ஸ்டு கார்களில் பராமரிப்புகளின் தேவைகளை எச்சரிப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை வழங்குவதற்கும் அலர்ட்ஸ் உள்ளன. அதாவது பராமரிப்பு அலர்ட்ஸ், டயர் பிரஷர் அலர்ட்ஸ், ரெட் லைட் வருகையில் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடுகள் போன்றவை உள்ளன.
ஹைபிரிட் கார்கள், எலக்டிரிக் கார்கள் ஆகியவை ஃப்யூல் சிக்கனத்தை மேம்படுத்துகின்றன. எரிபொருள் செலவை பெரும் அளவு குறைக்கின்றன. சூழலைக் கெடுக்கும் எமிஷன்ஸும் குறைகிறது.
முடிந்தவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம்.
மற்ற போக்குவரத்து வாகனங்கள் நீங்கள் செல்லும் இடத்துக்கு இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறுகிய தூரத்திற்குச் செல்ல மற்ற போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தலாம்.
நன்றாகத் திட்டமிடுங்கள். உங்களது எந்தெந்த பயணத்துக்கு அவசியம் உங்களின் வாகனம் தேவை எனத் திட்டமிடுங்கள். அவசியம் இல்லாதவற்றுக்கு வாகன பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.