Tirunelveli: வெள்ள நீரை நிரம்பாமல் உள்வாங்கும் அதிசய கிணறு - இது ஏன் நிரம்புவதில்லை? Screen shot from Twitter
தமிழ்நாடு

Tirunelveli: வெள்ள நீரை உள்வாங்கும் 'அதிசய கிணறு' - இது ஏன் நிரம்புவதில்லை?

Antony Ajay R

தென் தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததால் முக்கிய நரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன.

இதற்கு மத்தியில் எவ்வளவு தண்ணீர் ஊருக்குள் வந்தாலும் அதனை உள்வாங்கிக்கொள்ளும் திசையன்விளை கிணறுகள் வைரலாகி வருகின்றன. திசையன்விளை, நாசரேத்தை சுற்றியுள்ள பகுதியில் இதுபோல 10த்துக்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

2021 பருவ மழையின் போது ஓரளவு கனமழை பெய்த போது பல நாட்களாக தண்ணீர் உள்ளே சென்றும் அந்த கிணறுகள் நிறையாததால் மக்கள் அவற்றை அதிசய கிணறு என்று அழைக்கின்றனர்.

திசையன்விளை ஒரு வறண்ட பகுதி. இங்கு கோடைக்காலங்களில் நிலத்தடி நீரின் தேவை அதிகமாக இருக்கும். இதனால் மழை நீரை கிணறுகளில் சேமித்து வைக்க முன்னோர்கள் இதுபோன்ற கிணறுகளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த கிணறுகளில் அதிகமாக சுண்ணாம்புப் பாறைகள் காணப்படுகிறது. மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன் சுண்ணாம்புடன் வினைபுரிந்து துவாரங்கள் உருவாகி நாளடைவில் பெரிய குகைகளாக மாறியுள்ளது.

சில கிணறுகளின் ஆழத்தில் கால்வாய் போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணறுகள் மழை நீரை செலுத்தினால் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு நிலத்தடி நீரின் அளவு உயருமாம்.

இந்த கிணற்றுக்குள் வினாடிக்கு 1000 முதல் 3000 கனஅடி நீர் சென்றாலும் இது நிரம்புவதில்லை. இந்த கிணறுகளுக்கு அடியில் இருக்கும் பாதாள குகைகள் உருவாக 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என்கின்றனர்.

இந்த கிணறுகளுக்குள் வெள்ள உபரி நீரை செலுத்தும்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா கிணறுகளிலும் நீர்மட்டம் உயருகிறது. திசையன்விளை அருகில் இருக்கும் ஆயன்குளம் மட்டுமல்லாமல் கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் என பல பகுதிகளிலும் இதுபோன்ற கிணறுகள் காணப்படுகின்றன.

அதிசய கிணறுகள் இருந்தாலும் அவற்றால் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க முடியும் எனக் கூறிவிட முடியாது. வரலாறு காணாத மழையில் தத்தளிக்கும் மக்களை காக்கும் 1000 காரணிகளில் ஒன்றாக இந்த குளமும் தற்போது வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?