திருநங்கை காவலர் நஸ்ரியா Twitter
தமிழ்நாடு

"மனரீதியாக துன்புறுத்தபட்டேன்"- வேலையை ராஜினாமா செய்த தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவலர்

”எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தான் பணியில் சேர்ந்தேன். அந்தப் பணியை இனி தொடர முடியாது என ராஜினாமா கடிதம் எழுதி ஆணையரிடம் கொடுக்க உள்ளேன்”என்றார்.

Priyadharshini R

காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக துன்புறுத்துவதால் தனது காவலர் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததையடுத்து விசாரணை நடத்தப்படும் என காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

கோவை மாநகர காவல்துறையில் பணி புரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா.

தன்னுடைய மேல் அதிகாரி தன் பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாகப் பேசுவதாக நஸ்ரியா குற்றம் சுமத்தியுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருநங்கை நஸ்ரியா கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.

அப்போது இந்திய அளவில் இரண்டாவது திருநங்கை காவலராகவும் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை காவலராகவும் அவர் ஆனார்.

ராமநாதபுரத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய நஸ்ரியா கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை மாநகருக்கு மாற்றப்பட்டார். இவர் மூன்று ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக துன்புறுத்துவதால் தனது காவலர் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா கூறியுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”ராமநாதபுரத்தில் இருந்து கோவைக்கு பணியிடம் மாறி வந்த ஒரு வருடம் ஆயுதப்படையில் வேலை செய்தேன்.

அதுவரை பணி நன்றாக இருந்தாலும், ஒரு சிலர் பாலினத்தைக் குறிப்பிட்டு பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.சில நல்ல அதிகாரிகளும் இருந்தார்கள்.

இதே போன்று ஒவ்வொரு இடத்திலும் துன்புறத்தலுக்கு ஆளானேன். இதற்கு முன்பு ராமநாதபுரத்தில் இதே போல ஒரு சம்பவம் நடந்து நான் தற்கொலை முயற்சி எடுக்கும் நிலைக்கு சென்றேன்.

ஆய்வாளர் மீனாம்பிகை என்பவர்தான் நான் வேலை செய்யும் பிரிவின் பொறுப்பாளர். நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவள். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அதை குறிப்பிட்டு என்னிடம் பேசுவார் .என் பாலினத்தையும் சாதியையும் குறிப்பிட்டு பேசினார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆய்வாளர் மீனாம்பிகையின் தொந்தரவு அதிகமானது. எனக்கு அதிக வேலைப்பளு கொடுப்பது போன்ற மன ரீதியான துன்புறுத்தல்கள் கொடுத்து வந்தார்.

இனி என்னால் பணி செய்ய முடியாது. அதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டேன். எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தான் பணியில் சேர்ந்தேன். அந்தப் பணியை இனி தொடர முடியாது என ராஜினாமா கடிதம் எழுதி ஆணையரிடம் கொடுக்க உள்ளேன்” என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?