திருநெல்வேலி: இயற்கை வனப்புமிக்க மாஞ்சோலை - சுற்றுலா செல்ல அனுமதி பெறுவது எப்படி? Twitter
தமிழ்நாடு

திருநெல்வேலி: இயற்கை வனப்புமிக்க மாஞ்சோலை - சுற்றுலா செல்ல அனுமதி பெறுவது எப்படி?

Antony Ajay R

திருநெல்வேலி சுற்றுவட்டார மக்களால் நன்கு அறியப்படும் சுற்றுலாத்தளம் மணிமுத்தாறு அணை. அணைக்கு மேலாக மலைப்பாதையில் பயணம் செய்தால் நாம் அடையும் இடம் தான் மாஞ்சோலை.

திருநெல்வேலியில் இருந்து மாஞ்சோலை செல்ல 3 மணிநேரம் ஆகும். நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில்கொஞ்சும் மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களைப் பார்க்கலாம்.

இங்கு, தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் நிறைந்துள்ளன.

மாஞ்சோலை பெரிய அளவில் சுற்றுலாத் தலமாக அறியப்படவில்லை. ஏனெனில் இங்கு அவ்வளவு எளிதாக யாரும் சென்றுவர முடியாது.

மாஞ்சோலை முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்ட பகுதி என்பதனால் இங்கு வருவதற்கு வனத்துறையில் அனுமதி பெற வேண்டும்.

மாஞ்சோலைக்கு தினமும் திருநெல்வேலியில் இருந்து 4 பேருந்துகள், பாபநாசத்திலிருந்து 4 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் காலையில் வந்து மாலையில் திரும்ப எந்த அனுமதியும் தேவையில்லை.

ஆனால் நமது சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் அம்பாசமுத்திரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

இந்த அனுமதியை பயணத்துக்கு 3,4 நாட்கள் முன்கூட்டியே பெறவேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே மாஞ்சோலைக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஞ்சோலை குதிரைவெட்டியில் அரசுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்க வேண்டுமென்றால் http://kmtr.co.in/home/bookroom என்ற வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வலைத்தளத்தில் பதிவு செய்தால் வனத்துறையில் அனுமதி பெறவேண்டியதில்லை.

இந்த விடுதி அருகில் காட்சி கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் வயர்லெஸ் கோபுரமும் உள்ளது. இங்கிருந்து கயத்தாறு, மணிமுத்தாறு அணை வரைப் பார்க்கலாம்.

மாஞ்சோலை அரசுப் பள்ளிக்கு அருகிலும் இதேப் போல ஒரு கோபுரம் உள்ளது. நான்கு பக்கமும் பசுமையான மலைகள் இருப்பதைக் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?