தாமரை ராஜ்: 150 நாடுகளின் கரன்சிகளா? 19 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேமித்து வரும் இளைஞர்! twitter
தமிழ்நாடு

தாமரை ராஜ்: 150 நாடுகளின் கரன்சிகளா? 19 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேமித்து வரும் இளைஞர்!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரை பழங்கால நாணயங்கள், வெளிநாட்டு ரூபாய்கள், பல நாடுகளின் தபால்தலைகள், பழங்கால பொருட்களை சிறுவயதிலிருந்தே சேகரித்து வைத்திருக்கிறார்.

Priyadharshini R

ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு நாணயத்தின் வடிவமைப்பு பரிணமித்து வருகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கரன்சி நோட்டுகள் வேறு வடிவத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு வேறு விதத்திலும் மாற்றப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள், நாணயங்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. இதுபோன்ற பழைய நோட்டுகளை வாங்க அல்லது விற்க விரும்பும் பலர் ஆன்லைனில் இருக்கின்றனர். பழங்கால நாணயங்களை சேகரிப்பதில் பலர் ஆர்வமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த தாமரை ராஜ் என்பவர் கடந்த 19 ஆண்டுகளாக நாணயங்கள் சேகரித்து வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் தாமரை. பழங்கால நாணயங்கள், வெளிநாட்டு ரூபாய்கள், பல நாடுகளின் தபால்தலைகள், பழங்கால பொருட்கள் என பல பழமையான பொருட்களை சிறுவயதிலிருந்தே சேகரித்து வைத்திருக்கிறார்.

இந்த பொருட்களை சேகரிப்பதுடன், பழங்கால பொருட்கள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இதுவரை தமிழகம் முழுவதும் 230க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து தாமரை ராஜ் பேசுகையில், “ 19 வருடங்களாக நாணயங்கள், பழங்கால பொருட்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை சேகரித்து வருகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தின் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நாணயக் கண்காட்சிகளை நடத்தி வருகிறேன்.

எனது சேகரிப்பில் நைஜீரிய நைரா, பங்களாதேஷ் டாக்கா மற்றும் அமெரிக்க டாலர் உட்பட 150 நாடுகளின் கரன்சிகள் உள்ளன".

இந்த நாணயக் கண்காட்சிக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், நாணயத்தின் பின்னணியில் உள்ள வரலாற்றை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் தாமரை கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?