”நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழனும்” என்று மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு உறவினர்கள் தங்கள் தலைமையில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார். 40 வயதாகும் இவர் பி.காம் படித்து முடித்துள்ளார். பட்டதாரியான சசிக்குமார் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
மாற்றுத் திறனாளியான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசித்து வருகிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இவர் சராசரி மனிதர்களை போல் எந்த வேலையும் செய்ய முடியாமல் வாழ்ந்து வந்தார். இவரது வாழ்வில் திடீரென ஒளிவட்டம் தெரிந்தது.
அதே உயரத்தில் உள்ள பெண் ஒருவர் வணிக வரித்துறையில் பணியாற்றி வருவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மன மகிழ்ச்சியோடு அந்த பெண்ணை பார்க்க சென்ற சசிக்குமாருக்கு அவரை பார்ததும் பிடித்துப் போக அவரிடம் உடனே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வ.உ.சி தெருவை சேர்ந்த சாந்திக்கும், சசிக்குமாருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ மாற்றுத் திறனாளிகளான மணமக்களுக்கு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது. மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் அவர்களை வாழ்த்திச் சென்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த திருமணம் குறித்து நெகிழ்ந்த சசிக்குமார்,
”இதை எனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக கருதுகிறேன். தன்னை அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்த்த தனது பாட்டி மற்றும் அத்தை, மாமா, நண்பர்கள் உதவியுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
எங்களை வாழ்த்துவதற்காக வருகை தந்துள்ள அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டவர்கள் நிச்சயம் இலக்கை அடைய முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தளரக்கூடாது.”
திருமணம் தள்ளிப்போனபோதும், நமக்கான பெண் இனி பிறக்கப்போவதில்லை, எங்கோதான் இருக்கிறார், விரைவில் சந்திப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இப்போது சாந்தி எனக்குக் கிடைத்திருக்கிறார்.
என் மனைவியை முதன்முதலில் பார்த்தபொழுது தான் எட்ட முடியாத உயரத்தை எட்டியதைப்போல மகிழ்ச்சியை அடைந்தேன்' என்று உணர்ச்சிபொங்க பேசியிருக்கிறார் சசிக்குமார்.
மற்றவர்களைப்போல நாங்களும் வாழ்க்கையில் சாதிப்போம், நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்றார் சசிக்குமார்.
தனிமையில் வாடிய இரண்டு பேரும் இன்று ஒருங்கிணைந்துள்ளனர், மற்ற மாற்றுதிறனாளிகளுக்கு ஒரு நம்பிக்கையை அளித்திருக்கின்றனர். நாமும் 100 ஆண்டு காலம் வாழ அவர்களை வாழ்த்துவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust