டான்சர் ரமேஷ்
டான்சர் ரமேஷ்  Twitter
தமிழ்நாடு

டிக் டாக் டூ துணிவு : வைரல் டான்சர் ரமேஷ் தற்கொலை - யார் இவர்?

Priyadharshini R

தெருக்களில் சினிமா பாடல்களுக்கு பிரபு தேவா போன்று நடனமாடி சமூக வலைதளங்களில் திடீரென வைரலானவர் தான் டான்சர் ரமேஷ். இவரின் நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

டான்சர் ரமேஷிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் முதல் மனைவி புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளையொட்டி முதல் மனைவியின் வீட்டுக்குச் சென்ற டான்சர் ரமேஷ், அங்கு 10வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

யார் இந்த ரமேஷ்?

சிறு வயதில் இருந்தே, நடனத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர் ரமேஷ். நடனக் கலைஞராக வேண்டும் என்கிற ஆசையில், பிரபுதேவாவை ரோல் மாடலாக வைத்து திரைப்படங்களை பார்த்து பயிற்சி பெற்று தன்னுடைய திறமையை இன்னும் மெருகேற்றி கொண்டார். சினிமாவிலும் வாய்ப்புத் தேடியுள்ளார்.

சில வருடங்கள் இதற்காக பல முயற்சிகளை செய்தும் வாய்ப்பு கிடைக்காததால் கூலி வேலை செய்து வந்துள்ளார். பின்னர், பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வந்துள்ளார்.

ரமேஷின் நடனத் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக இவரது நண்பர்கள் அவரின் டான்ஸ் வீடியோவை எதார்த்தமாக டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்ற அது வேற லெவலில் வரவேற்பைப் பெற்றது.

அவரின் நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமூக வலைதளங்களில் திடீரென வைரலான இவருக்கு ஜீ தமிழ் நடன நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல பிரபலங்களையும் தனது நடனத்தால் கவர்ந்திருந்தார் ரமேஷ்.

அவ்வப்போது, யூடியூப் ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வந்தார் ரமேஷ்.

இவரது திறமையை கண்ட சிலர் சினிமாவில் வாய்ப்பும் கொடுத்தனர். சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

டிக் டாக் டூ வெள்ளித்திரை

அஜித்குமார் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்சர் ரமேஷ்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும், 'ஜெயிலர்' படத்திலும் டான்ஸ் ஆடியுள்ளார்.

அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கிய நிலையில், திடீரென இவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?